மொத்த கண்ணும் அங்கே தான்.. கண்ணாடி வைத்த ஜாக்கெட்.. டிடியை பார்த்து வாயை பிளந்த ஃபேன்ஸ்!

சென்னை: தனது அசாத்தியமான பேச்சாலும், அழகாலும் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை
திய்வதர்ஷினி என்ற டிடி. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பகிர்ந்து இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது.

திவ்யதர்ஷினி இளம் வயதிலேயே சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக மாறினார். சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்களை பேட்டி எடுத்து பெயர் எடுத்தார் டிடி. அந்த நிகழ்ச்சி வெற்றி பெற காரணமே டிடி தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி இருந்தது. அந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறிய டிடி, பாட்டு போட்டி, கேம் ஷோ என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Dhivyadharshini instagram

திவ்யதர்ஷினி: இப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிஸியாக இருந்த டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திவ்யதர்ஷினி திருமணம் ஆனதும், தாலி வெளியே தெரியும் படியே, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தனது சேனலின் செல்லப்பிள்ளைக்கு திருமணமானதை விஜய்டிவியும், நிகழ்ச்சியிலேயே நலங்கு வைத்து கொண்டாடியது. ஆசை ஆசையாக வாழ்க்கையை தொடங்கிய திவ்யதர்ஷினியின் வாழ்க்கை 3 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது.

மூட்டு வலி: தற்போது தனியாக வாழ்ந்து வரும் டிடிக்கு, சில வருடங்களுக்கு முன்பு காலில் வலி ஏற்பட, அதற்காக ஆப்ரேஷன் செய்யப்போய் அது விபரீதத்தில் முடிந்துள்ளது. எந்த ஷோவாக இருந்தாலும், பல மணி நேரங்கள் நின்றே வேலை பார்த்த இவர், அதன் பிறகு சில நிமிடங்கள் கூட நிற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். தான் பட்ட வேதனையை டிடி, ஒரு நிகழ்ச்சியில் கண்ணீருடன் பேசி இருந்தார். இதையடுத்து, அண்மையில் திவ்யதர்ஷினுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த ஆப்ரேஷனுக்கு பிறகு டிடி மீண்டும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.

கஷ்டமாக இருந்தது: அண்மையில் டிடி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு நடிகை அணிந்திருந்த சேலை போலவே நானும் அணிந்திருந்ததால், அவர் நீங்கள் ஆடையை மாற்றிக் கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார். ஆனால், என்னிடம் வேறு ஆடை இல்லை என்றேன். பின் அதே ஆடை உடன் தான் அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். ஆனாலும் அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறியிருந்தார். யார் அந்த நடிகை என பெயர் சொல்லாமல் கூறியிருந்தாலும், பலர் அது நயன்தாராவாகத் தான் இருக்கும் என கூறியிருந்தனர்.

இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராமில் கருப்பு வெள்ளை சேலையில் இருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் அணிந்து இருக்கும் ஜாக்கெட் முழுக்க கண்ணாடி வேலைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலர்,மொத்த கண்ணும் அங்கே தான் இருக்கு என்று கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

FAQs
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடித்த முதல் படம் எது தெரியுமா?

நள தமயந்தி

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X