»   »  தியாவின் புதுக் கதை!

தியாவின் புதுக் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தியா மீண்டும் பிசியாகி விட்டார்.

விஜய்யின் சித்தி மகன் விக்ராந்துடன் அவர் நடித்த "கற்ககசடறவிற்குப் பிறகு இப்போது அவரது கையில் 3 படங்கள் உள்ளதாம்.தமிழில் "கோடம்பாக்கம், "கர்த்தா ஆகிய படங்களுடன் மலையாளத்தில் "மின்னல் என்ற படத்திலும் நடிக்கிறாராம் தியா.

கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட பிகு பண்ணாத, சளைக்காத தியாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனதால்இடையில் மனம் தளர்ந்து போயிருந்தார்.

இந்த நிலையில் "கற்க கசடற படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியின் உச்சம் குறித்து அறிந்த தயாரிப்பாளர்கள் தியாவை இப்போதுபொட்டியுடன் முற்றுகையிட்டு வருகிறார்களாம்.

வந்த வரை லாபம் என்று அனைத்து வாய்ப்புகளையும் வளைத்துப் போட்டுள்ள தியா, கதைக்காக எப்படி வேண்டுமானாலும்நடிக்கத் தயார் என்று கூறி தயாரிப்பாளர்களை புளகாங்கிதப்படுத்தி உள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சந்திப்பவர்களிடம் தனது குடும்பப் புராணத்தையும் கூறி வருகிறார் தியா. அதாவது அவருக்குமலேசியாவில் நிறைய சொத்து உள்ளதாம். பரம்பரப் பணமே பல தலைமுறைக்கு வருமாம்.

அப்புறம் எதுக்கு நடிப்பு? என்று கேட்டால், கலை தாகத்தால் நடிக்க வந்தேன். வந்த பிறகுதான், சினிமா எனக்கு ரொம்பவேபிடித்துப் போய் விட்டது. பலதரப்பட்ட ரோல்களிலும் நடித்து முடிக்க வேண்டும் என்று இப்போது தீராத வெறியுடன்இருக்கிறேன்.

விரைவில் எனது சொந்தத் தயாரிப்பில் ஒரு படத்தை உருவாக்கப் பாகிறேன். இந்தப் படம் எனது விருப்பத்திற்கேற்பஉருவாகும். படத்தை உடனே தொடங்குவதாகத்தான் திட்டம் இருந்தது.

ஆனால், கையில் நிறைய படங்கள் வந்துள்ளதால் தயாரிப்புப் பணியை தள்ளி வைத்துள்ளேன் என்று அடுக்குகிறார் தியா.

தியா, நீங்க சொல்வது உண்மையா?

Read more about: dhiya is now busy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil