எனக்கு நாலு பாய் பிரண்ட் இருக்காங்க... டோணி ஒரு கறை: ராய் லட்சுமி

By Mayura Akilan

துபாய்: தோணி என் வாழ்க்கையில் வந்தது மிகப்பெரிய கறை, அதை நான் மறக்க நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ராய் லட்சுமி. டோணிக்கு பிறகு என் வாழ்க்கையில் நான்கு பாய்பிரண்டுகள் வந்து போயுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராய்லட்சுமி தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ள படங்கள் இப்போது ஹாட்டாக உலா வந்து கொண்டிருக்கின்றன. துபாயில் விடுமுறை கொண்டாடப் போன அவர், சும்மா பறந்து பறந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

தன்னுடைய தோழிகளுடன் புத்தாண்டு தின விடுமுறையை கொண்டாடி உற்சாகமாக பொழுதை கழித்துள்ளார். அவற்றை புகைப்படமாக எடுத்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஆனால் ராய் லட்சுமி எங்கு போனாலும் டோணி பற்றியே கேட்டு கடுப்பேற்றுகிறார்களாம். இதனால் காட்டமாக பதில் சொல்லி வருகிறார்.

அரண்மனை தந்த மாற்றம்

அரண்மனை தந்த மாற்றம்

லட்சுமிராய் என்ற பெயரை மாற்றியதால் ஒர்க் ஆகியுள்ளது ராய் லட்சுமிக்கு. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அரண்மனை' படம் வெற்றிகரமாக ஓடி, இவருக்கு தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது.

கைவசம் புதுப்படங்கள்

கைவசம் புதுப்படங்கள்

இப்படத்தை தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மலையாளத்தில் 2 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

டோணி யார்?

டோணி யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி திருமணத்திற்கு முன்னர் சென்னை வரும் போதெல்லாம் ராய் லட்சுமியுடன் பைக்கில் சுற்றுவார். திடீரென்று சாக்ஷியை திருமணம் செய்து கொண்டதால் தனித்து விடப்பட்டார் ராய் லட்சுமி. ஆனால் அவர் மறந்தாலும் ரசிகர்கள் இன்னமும் மறக்கவில்லையாம்.

அது ஒரு கறை

அது ஒரு கறை

இது பற்றி கேட்டால் கொதிக்கிறார் ராய் லட்சுமி, அது ஒரு கறை மாதிரி, டோணிக்குப் பின்னர் நான் நான்கு பாய் பிரண்டுகளுடன் சுற்றியிருக்கிறேன் அது ஏன் யார் கண்ணுக்கும் தெரியமாட்டேங்குது என்று கேட்கிறார்.

புத்தாண்டு விடுமுறை

புத்தாண்டு விடுமுறை

இந்த டென்சனை மறக்கத்தான் படப்பிடிப்பிலிருந்து ராய் லட்சுமிக்கு சற்று ஓய்வு கிடைத்ததும், தனது தோழிகளுடன் விடுமுறையை ஜாலியாக கொண்டாட போய்விடுகிறார் ராய் லட்சுமி

ஸ்கை டைவிங்

ஸ்கை டைவிங்

துபாய் சென்ற அவர், வேகமாக செல்லும் படகை ஓட்டுவது, ஸ்கை டைவிங் எனப்படும் வானத்தில் பறவை போன்று பறப்பது போன்ற சாகசங்களை செய்து ஜாலியாகவும், திரில்லாகவும் விடுமுறையை கொண்டாடியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் குஜால்

ஃபேஸ்புக்கில் குஜால்

அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கருப்பு உடையில் கவர்ச்சி புயலாக கலக்கலாக இருக்கிறார் ராய் லட்சுமி.

டெடி பியருடன்

டெடி பியருடன்

விலையுயர்ந்த கார்கள் முன்னால் நின்று புகைப்படம் எடுத்தது, கடற்கரையில் நின்று கொண்டு ஹாயாக காற்று வாங்குவது, துபாய் நகரின் வீதிகள், மற்றும் ஷாப்பிங் மாலில் நண்பர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதையும் வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதற்கு சும்மா லைக் அள்ளுகிறார் ராய் லட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X