Vettaiyan: துஷாரா விஜயன் தோள்மீது கைபோட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தில் என்ன ரோல்?

சென்னை: லைகா தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து வசூல் வேட்டையும் நடத்தியது. ஆனால், பொன்னியின் செல்வன் 2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறவில்லை. ஓரளவு வசூலை அள்ளியது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை லைகா நிறுவனத்துக்கு தொடர்ந்து தோல்வி முகமாகவே உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனதால் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் நடித்தாலும் அந்த படம் எடுபடவில்லை. ஓடிடியிலும் பல மாதங்கள் ஆகியும் அந்த படம் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vettaiyan dhushara vijayan rajinikanth

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து மிஷன் சாப்டர் 1 படமும் வசூல் வேட்டை நடத்தவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வசூலில் மரண அடி வாங்கியது லைகாவுக்கு பெரிய இழப்பாகவே மாறிவிட்டது. இந்நிலையில், லைகாவை ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுத பூஜைக்கு வேட்டை: வரும் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்துக்காக தற்போது லைகா நிறுவனம் புரமோஷனில் முழு வீச்சாக இறங்கியுள்ளது. ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ரித்திகா சிங் கேரக்டர்: இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ரித்திகா சிங் இந்த படத்தில் போலீஸ் அதிகாரி ரூபாவாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவரது டீமில் ரூபா இருப்பார் என தெரிகிறது. அவரது கேரக்டர் ரோல் குறித்த வீடியோ அறிவிப்பை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டது.

சரண்யா டீச்சர்: ரித்திகா சிங்கை தொடர்ந்து துஷாரா விஜயனின் கேரக்டர் குறித்த வீடியோவையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சரண்யா டீச்சர் ரோலில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தி வரும் துஷாரா விஜயனுக்கு வேட்டையன் படத்தில் கிடைத்திருக்கும் கதாபாத்திரம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தின் தங்கச்சியா?: ரஜினிகாந்தின் மனைவியாக இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். துஷாரா விஜயன் தோள் மீது ரஜினிகாந்த் கை போட்டு நிற்கும்படியான காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில், வேட்டையனின் தங்கையாக நடித்திருக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. பகத் ஃபாசில், ராணா டகுபதி என யாருக்காவது இவர் ஜோடியா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான தனுஷின் ராயன் படத்தில் துஷாரா தனது நடிப்பால் தூள் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ லாஞ்ச்: வரும் செப்டம்பர் 20ம் தேதி வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிமுகத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அனிருத் இசையில் வேட்டையன் பட பாடல்கள் அத்தனையும் தாறுமாறாக வந்திருப்பதாக கூறுகின்றனர். பின்னணி இசையிலும் சூப்பர் ஸ்டாருக்கு அவர் தரமான சம்பவம் செய்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X