பிளாஸ்டிக் சர்ஜரியால் அழகை தொலைத்த ஷிவானி.. இதெல்லாம் தேவையா? ரசிகர்கள் கவலை!

சென்னை: வசீகரமான அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், இவர் அண்மையில் பகிர்ந்து வரும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு காரணம் பொலிவு இழந்து காணப்படும் இவரின் முகம் தான்.

மாடல் அழகியான ஷிவானி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து ரெட்டை ரோஜா என அடுத்தடுத்து சீரியலில் நடித்து வந்த இவருக்கு கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கின் முறை பெண்ணான நடிக்கும் வாய்ப்பு வந்தது. பட வாய்ப்பை மேலும் அதிகரிக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

shivani narayanan bigg boss photos

ஷிவானி நாராயணன்: இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தது, தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தது. என பிக் பாஸ் வீட்டில் அவர் விளையாடிய விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில், பாலாஜி முருகதாஸ் பின்னாடி சுற்றி பெயரை கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார். அதன் பின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் வடிவேல் கம்பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர்கே பாலாஜி படம் அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இது தேவையா?: தற்போது சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தாலும் தன்னை வாழ வைத்த ரசிகர்களுக்காக எப்போதும் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களான இவர் ஷேர் செய்யும் போட்டோ கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. அந்த போட்டோக்களில் ஷிவானி பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு முகம், உதடு வீங்கி காணப்படுகிறார். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது தான் இதற்கு காரணமா என்றும், நல்ல இருந்த முகத்தை ஏன் இப்படி பண்ணி வச்சிருக்கீங்க? இப்போ முகத்தை பார்க்க சகிக்கவில்லை என ஷிவானி நாராயணனின் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X