பிகில் தென்றலுக்கு திருமணம் ஆகிடுச்சா? மணப்பெண் கோலத்தில் அம்ரிதா அய்யர் போட்ட போஸ்ட்டை பாருங்க!
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பை அள்ளி இருந்தார் நடிகை அம்ரிதா அய்யர்.
28 வயதாகும் அம்ரிதா அய்யர் மலையாளத்தில் கடந்த 2012ல் வெளியான பத்மவியூகம் படத்தில் அடையாளம் தெரியாத கேரக்டரில் நடித்து இருந்தார். விஜய்யின் தெறி படம் வரை அப்படியே நடித்து வந்த அம்ரிதா படைவீரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்நிலையில், திருமண கோலத்தில் நடிகை அம்ரிதா அய்யர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளன.

பிகில் தென்றல்
பிகில் தென்றல் என்றே ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு பிகில் படத்திற்கு பிறகே பிரபலமானார் அம்ரிதா அய்யர். அதன் பின்னர் வெளியான ஜிவி பிரகாஷின் வணக்கம்டா மாப்ள மற்றும் பிக் பாஸ் கவினின் லிப்ட் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார்.

அவ்ளோ அழகு
இன்ஸ்டாகிராமில் அம்ரித அய்யருக்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்களுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அழகாக க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். ஆபாசமாகவோ ஓவர் கவர்ச்சியாகவோ அம்ரிதா அய்யர் போட்டோக்களை போடுவதில்லை.

திருமணம் ஆகிடுச்சா
இந்நிலையில், நடிகை அம்ரிதா அய்யர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகின்றன. பட்டுப் புடவை அணிந்து கொண்டு மாலையும் கழுத்துமாக மாப்பிள்ளை அருகே இவர் அமர்ந்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அம்ரிதா அய்யருக்கு திருமணம் ஆகிடுச்சா, ஒரு வார்த்தை கூட சொல்லலயே என புலம்பி வருகின்றனர்.

பதறிப்போன நடிகை
இந்நிலையில், அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ஷேர் செய்த அம்ரிதா அய்யர்"No no it's not my marriage pictures!" என தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது படத்திற்கான ஷூட்டிங் ஸ்டில்ஸ் என விளக்கம் அளித்துள்ளார். அம்ரிதாவின் அந்த போஸ்ட்டுக்கு கீழ் உங்களுக்கு எப்போ கல்யாணம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்பாடா, நான் கூட ஷாக் ஆகிட்டேன் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

4 படங்கள் லைன் அப்
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல், தெலுங்கில் உருவாகி வரும் சூப்பர் ஹீரோ படமான ஹனுமான், அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த டிஜே அருணாச்சலம் நடிக்கும் தமிழ் படம் மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் கிராமயணா என 4 படங்களில் நடித்து வருகிறார் அம்ரிதா அய்யர்.


Click it and Unblock the Notifications











