Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நான் அந்த ஹீரோவை காதலித்தேனா..? ஷாக்கான ரைசா வில்சன்!
சென்னை: வேலையில்லா பட்டதாரி 2ல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்
இப்போது பல்வேறு படங்களில் கைவசம் நடித்துவரும் ரைசா வில்சன் அந்த பிரபல இளம் நடிகரை நான் காதலிக்கவில்லை என மறுத்துள்ளார்.
சிம்பு ஹோஸ்ட்...இவர் ஸ்பெஷல் கெஸ்ட்டா...அப்போ பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே வேற லெவல் தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக
வேலையில்லா பட்டதாரி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி பாகம்-2 இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு பிஏ-வாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனித்துவமான விளையாட்டின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரைசாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உருவானது.

இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது
பிக்பாஸில் சக போட்டியாளராக இருந்த ஹரிஷ் கல்யாணுடன் மிகவும் நெருங்கி பழகிய ரைசா அப்பொழுது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது எனினும் அதை அவர் மறுத்து வந்தார் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த உடனேயே ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஜோடியாக நடித்த திரைப்படம் பியார் பிரேமா காதல்.

லிவிங் டுகெதர் லைஃப்பை
அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இன்றைய தலைமுறையின் காதலை மிகவும் அழுத்தமாகவும் லிவிங் டுகெதர் லைஃப்பையும் கூறியிருந்த இந்த படம் ரைசாவுக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது.

சந்தேகம் ரசிகர்கள் மத்தியில்
மேலும் இந்த படத்தில் ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. எனவே நிஜமாகவே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டது

கிசுகிசுவுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி
பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரைசா வில்சன் அளித்த பேட்டி ஒன்றில் ஹரிஷ் கல்யாணை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது காதலிக்கிறார்களா என கேட்டதற்கு இல்லை என்றும் ஹரிஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர் அவர் க்யூட்டான நண்பர் அவரை நான் எப்போதும் காதலித்தது இல்லை என்றும் ஹரிஷ் கல்யாண் மீதான கிசுகிசுவுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.