»   »  படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கினாரா காஜல்?

படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கினாரா காஜல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காஜல் அகர்வால் தான் நடித்த படத்தை விளம்பரப்படுத்த ரூ. 30 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் அஜீத்துடன் சேர்ந்து விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ராணாவுடன் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி தெலுங்கு படம் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

காஜல் கையில் தற்போது எந்த பெரிய தெலுங்கு படமும் இல்லை.

விளம்பரம்

விளம்பரம்

நயன்தாரா மாதிரியே படத்தில் நடிப்பதோடு சரி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் காஜல். இந்நிலையில் அவர் ராணா படத்தை மட்டும் ஓடியோடி விளம்பரம் செய்துள்ளார்.

துட்டு

துட்டு

நேனே ராஜு நேனே மந்திரி படத்தை விளம்பரப்படுத்துவதற்கு என்று தனியாக ரூ. 30 லட்சம் வாங்கினார் காஜல் என்று கூறப்படுகிறது. விளம்பர நிகழ்ச்சிக்கே ரூ. 30 லட்சமா என்று பலரும் வியக்கிறார்கள்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் சுரேஷ் பணத்தை வீணாக செலலவு செய்ய மாட்டார். அப்படி இருக்க அவர் காஜலுக்கு நிச்சயம் ரூ. 30 லட்சம் கொடுத்திருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

படம்

படம்

காஜல் கையில் படங்கள் இல்லாததால் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலாவது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பார்வை தன் மீது பட்டு வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் அவர் இப்படி செய்தார் என்ற பேச்சும் உள்ளது.

English summary
Buzz is that Kajal Agarwal charged Rs. 30 lakh to promote Rana starrer Nene Raju Nene Mantri movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil