Don't Miss!
- News
"கை" நடுங்கிட.. "கரும்பு" பிழிந்திட.. வர்றார் "பாட்டில் பொறுக்கி".. ஈவிகேஎஸ் இதுக்கு ஓகேவா: ஆறுமுகம்
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Sports
ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மாளவிகா மோகனன்? தீயாக பரவும் சிலம்பம் வீடியோ!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் பற்றி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே தெரிகிறது.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
கவர்ச்சியில்
கண்
கூச
வைக்கும்
மாளவிகா
மோகனன்..படு
ஹாட்
போட்டோஸ்!

மாஸ்டர் ஹீரோயின்
பேட்ட படத்தில் கேரக்டர் ரோலில் நடித்த மாளவிகா மோகன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் தான் கோலிவுட்டில் ஹீரோயினாக அசத்தினார். மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுந்த மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷின் மாறன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

தங்கலான் படத்தில்
மாறன்
படம்
எதிர்பார்த்த
அளவுக்கு
போகாத
நிலையில்,
பாலிவுட்
படங்களில்
கவனம்
செலுத்த
மாளவிகா
மோகனன்
மீண்டும்
கோலிவுட்டில்
இயக்குநர்
பா.
ரஞ்சித்
இயக்கத்தில்
சியான்
விக்ரம்
நடித்து
வரும்
தங்கலான்
படத்தில்
நடித்து
வருகிறார்.
தங்கலான்
படத்தில்
இன்னொரு
ஹீரோயினாக
நடிகை
பார்வதியும்
நடித்து
வருவது
குறிப்பிடத்தக்கது.

அதிரடி நீக்கமா?
தங்கலான் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனின் நடிப்பு இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திருப்திகரமாக இல்லை என்றும் அவர் படத்தில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்றும் வதந்தி ஒன்று காட்டுத் தீ போல சோஷியல் மீடியாவில் பரவியது. இந்நிலையில், அந்த வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன்.

சிலம்ப வீராங்கனை
நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் பயிற்சி செய்யும் அசத்தலான புதிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். ப்ளூ கலர் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு மாளவிகா மோகனன் அசுரத்தனமாக சிலம்பம் சுற்றும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன திடீரென சிலம்பம் பக்கம் தாவிட்டீங்க என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்திற்காகத்தான் மாளவிகா மோகனன் சிலம்பாட்ட பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாளவிகா மோகனனின் இந்த சிலம்பம் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.