»   »  நயன்தாராவுக்கு ரகசிய திருமணமா? பரபரக்கும் மீடியா!

நயன்தாராவுக்கு ரகசிய திருமணமா? பரபரக்கும் மீடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா என்று சில மீடியாக்களில் செய்தி கிளம்ப, பரபரத்துப் போயுள்ளது கோடம்பாக்கம்.

அதேநேரம் இது வெறும் விளம்பரப் புரளி என்று விஷயமறிந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார்.

Did Nayanthara wed Vignesh Shivan in secret ceremony?

படப் பிடிப்பின் போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாக நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர். விக்னேஷும் மலையாளி என்பதால் காதல் மேலும் உறுதியானதாகவும், எனவே அவரை தனது வீட்டினருக்கு காதலனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் நயன்.

ஏற்கனவே பிரபு தேவா, சிம்பு ஆகியோருடனான காதல் கல்யாணம் வரை வந்து நின்று போனது அனைவரும் அறிந்ததே. ஆனால் விக்னேசை நயன்தாரா மிக ஆழமாக காதலிக்கிறாராம். எனவே இது கண்டிப்பாக திருமணத்தில் முடியும் என்று சிலர் உறுதிபடக் கூறிய நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பேச்சு எழுந்துள்ளது.

கடந்த வாரம் பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப் படுகிறது. நயன்தாராவுக்கு நிறைய படங்கள் தற்போது புக்காவதால் திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனராம்.

English summary
The latest buzz in Kollywood that has many people in shock is that nayanthara has gotten married to her Naanum Rowdythaan director Vignesh Shivan. There has been no official confirmation of the wedding but sources close to the couple allege they did get married.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil