நிச்சயதார்த்தம் ஆன நிலையில் நிவேதா பெத்துராஜ் திருமணம் நின்றுவிட்டதா?.. சமந்தா ரூட்டில் பார்த்த வேலை
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து காதலருடன் நிச்சயமான புகைப்படங்களை நீக்கியுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.
இந்த டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவேதா பெத்துராஜ் நிச்சயதார்த்தம் செய்த ரஜித் இப்ரானும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிவேதா பெத்துராஜ் புகைப்படங்களை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிரிதி மந்தனாவை தொடர்ந்து நிவேதா பெத்துராஜ்: கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சமீபத்தில், தனது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை ரத்து செய்திருந்தார். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜும் தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு முக்கிய காரணமே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் மட்டும் டெலிட் ஆகியிருப்பது தான் எனக் கூறுகின்றனர்.
சமந்தா ரூட்: சமீப காலமாக சினிமா பிரபலங்கள் சமந்தாவை போல பிரேக்கப்பை அறிவிக்க தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து திருமணமான புகைப்படங்களையும் நிச்சயம் ஆன புகைப்படங்களையும், ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கி விடுகின்றனர். அதே பாணியை நிவேதா பெத்துராஜ் கையில் எடுத்துள்ளார் என்றும் நிவேதா பெத்துராஜின் காதலரே பிக் பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் தான் என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் ரெடிட் வலைதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மெளனம் கலைப்பாரா நிவேதா பெத்துராஜ்: கடந்த சில நாட்களாக தனிமை பற்றியும் புதிய தொடக்கம் குறித்தும் சில போஸ்ட்டுகளை பதிவிட்டு வரும் நிவேதா பெத்துராஜ் இதுவரை தனது திருமணம் நின்றுவிட்டது குறித்தும் காதல் பிரேக்கப் ஆனதாகவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அவர் மெளனம் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேள்விக்குறியாகும் காதல்: இன்றைய உலகில் மனிதர்கள் மத்தியில் உண்மையான அன்பும் காதலும் கேள்விக்குறியாகவே மாறி நிற்கிறது என்றும் நிவேதா பெத்துராஜ் கண்டிப்பாக இந்த மன வலியில் இருந்து மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் நிவேதா பெத்துராஜின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போஸ்ட்டுகளுக்கு கீழ் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











