Pushpa 2: சமந்தாவால் ஹர்ட் ஆன ராஷ்மிகா மந்தனா ஈகோ.. ஸ்ரீலீலாவை சும்மா ஓரங்கட்ட இதுதான் காரணமா?
சென்னை: புஷ்பா படத்திலேயே "சாமி சாமி" பாட்டுக்கு வெறும் பாவாடை எல்லாம் கட்டிக் கொண்டு ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி பொங்க நடனமாடினாலும், சமந்தா வந்து "ஊ சொல்றியா மாமா" பாட்டுக்கு பார்வைகளால் சும்மா காமத்தை அள்ளி வீசிய நிலையில், சமந்தா இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கினார். புஷ்பா படத்துக்கு மற்ற மொழிகளில் கல்லா கட்டவும் அந்த பாடல் தான் காரணமாக அமைந்தது.
படத்தில் ஹிரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் 4 கோடி ரூபாய் என்றும் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் என்றும் வெளியான தகவல்களால் மேலும், ராஷ்மிகா மந்தனாவின் ஈகோ ஹர்ட் ஆகியிருக்கக் கூடும் என்றும் அதன் காரணமாகவே 2ம் பாகத்தில் ஸ்ரீலீலாவை விட கிளாமர் தூக்கலாக நடனமாட வேண்டும் என லேடி அல்லு அர்ஜுனாகவே ராஷ்மிகா மந்தனா மாறிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித்தின் விடாமுயற்சி டீசர் தமிழில் 4 நாட்கள் ஆகியும் 10 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்த நிலையில், தெலுங்கில் வெளியான புஷ்பா 2 படத்தின் பீலிங்ஸ் பாடல் ஒரே நாளில் 15 மில்லியன் பார்வைகளையும் தமிழில் வெளியான பாடல் 3.5 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன. அனைத்து மொழிகளிலும் பீலிங்ஸ் பாடல் அதிரி புதிரி ஹிட் அடிக்க காரணமே ராஷ்மிகா மந்தனா தான் என்பது மறுக்க முடியாத உண்மை என ரசிகர்கள் கூறுகின்றனர்.
சமந்தா தான் கெத்து: புஷ்பா படத்தில் ஹிட்டான "ஊ சொல்றியா மாமா" பாடலில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போய்விட்டனர். அந்த அளவுக்கு புஷ்பா 2 படத்தில் ஒரு பாடல் அமையும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். மீண்டும் சமந்தா ஆட போகிறார் என்றும் இல்லை ஸ்ரத்தா கபூர் ஐட்டம் டான்ஸ் ஆடப் போகிறார் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. கடைசியில், குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீலீலா தான் "கிஸ்ஸிக்" பாடலில் நடனமாட ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டனர். சமந்தா அளவுக்கு இல்லை என்றும் சமந்தா தான் கெத்து என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் ஸ்ரீலீலாவின் நடனத்தை குறித்து வெளியாகின. ஏற்கனவே அடிவாங்கி வரும் தேவி ஸ்ரீ பிரசாத்தையும் மீண்டும் போட்டு வெளுக்க ஆரம்பித்தனர்.
ஸ்ரீலீலாவை ஓரங்கட்டிய ராஷ்மிகா: புஷ்பா 2 படத்தில் முதன்முதலில் வெளியான "சூடான தீ கங்கு மாதிரி" பாடலை விட அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படு போல்டான ஆட்டத்தை ராஷ்மிகா மந்தனா போட்டுள்ள லேட்டஸ்ட் பாடலான "பீலிங்ஸ்" பாடலை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீலீலா அப்படியே ஓரமாப்போம்மான்னு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்தளவுக்கு ராஷ்மிகா மந்தனா படுகவர்ச்சியாக நடனமாட முக்கிய காரணமே முதல் பாகத்தில் ஹர்ட் ஆன அவரது ஈகோ தான் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட ஆரம்பித்து வருகின்றனர்.
ரசிக்கும்படி இல்லை: அதேவேளையில் பாடலின் வரிகள் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் மோசமான ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இது ரசிக்கும்படி இல்லை என்றும் ரொம்பவே ஆபாசமான நடன அசைவுகளை கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. ஆனால், எப்படி இருந்தாலும் புஷ்பா 2 படத்தின் ஆல்பத்தில் ஹிட் பாடலாக பீலிங்ஸ் மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











