2வது திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமானாரா சமந்தா?.. ’பேபி பம்ப்’ தெரியுது என கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா 4 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த நிலையில், இருவரும் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தும் விட்டனர்.

அதன் பின்னர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக் கொள்ள, நான் மட்டும் தனியா வாடணுமா என நினைத்த சமந்தா, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துக் கொண்டார்.

Did Samantha just now showed her Baby Bump Social Media goes crazy over her pregnancy buzz

எங்கள் தங்கம் படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே தூள் கிளப்பிய சந்தோஷத்தை சமந்தா தனது 2வது கணவருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய போது அவரது பேபி பம்ப் தெரிந்து விட்டது என்றும் சமந்தா கர்ப்பமாக உள்ளார் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

2வது திருமணத்தில் குழந்தைப் பெற்ற அமலா பால்: நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. 2வதாக ஜகத் தேசாயை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இலை எனும் ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், சமந்தாவும் அதே போல செய்யப் போகிறாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா?: எங்கள் தங்கம் படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை முதல் நாளே பெற்ற நிலையில், சக்சஸ் பார்ட்டியை 2வது கணவர் ராஜ் நிதிமோரு மற்றும் படக்குழுவுடன் தயாரிப்பாளரும் நடிகையுமான சமந்தா கேக் வெட்டிக் கொண்டாடினார். வெறும் டிசர்ட் அணிந்துக் கொண்டு சமந்தா சந்தோஷத்தைக் கொண்டாடிய நிலையில், அவரது வயிற்றுப் பகுதியை நோட் பண்ண ரசிகர்கள் சமந்தா பேபி பம்ப் காட்டிவிட்டார் என்றும் சமந்தா கர்ப்பமாக உள்ளார் வாழ்த்துகள் என கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

உண்மையா? பொய்யா?: நடிகை சமந்தா சமீபத்தில் சென்னைக்கு புரமோஷன் நிகழ்ச்சிக்கு வரும் போதும் முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் போது அவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் இதுபோல சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால், தற்போது சக்சஸ் பார்ட்டியில் சமந்தா கர்ப்பமாக உள்ளார் என பரவப்படும் தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து இதுவரை சமந்தாவோ அவரது தரப்போ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X