கீர்த்தி சுரேஷை அவமானப்படுத்தினாரா சத்யராஜ்?.. விஜய் பிரச்னைதான் காரணமா?.. புது பஞ்சாயத்து
சென்னை: தமிழ், தெலுங்கும், ஹிந்தியில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அழகு மட்டுமின்றி திறமையையும் கொண்டிருக்கும் அவர் மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது அவருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக புது பஞ்சாயத்து சோஷியல் மீடியாவில் கிளம்பியிருக்கிறடு.
தமிழில்ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம்தான் கீர்த்திக்கு தமிழில் முதல் படம். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து சரசரவென்று முன்னேறினார். ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்திலும் நடித்தார்.

தேசிய விருது: இதற்கிடையே நடிகையர் திலகம் என புகழப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் மகாநடி என்றும்; தமிழில் மகாநடிகை என்றும் படம் ரிலீஸானது. அச்சு அசல் சாவித்திரியை போலவே தனது உடல்மொழியில் மிரட்டியிருந்த கீர்த்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்று அசத்தினார். தேசிய விருது வென்றதன் காரணமாக மலைபோல் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ட்விஸ்ட் அடிக்கும் விதமாக அதற்கு பிறகுதான் அவருக்கான சான்ஸ்கள் குறைந்தன.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: அப்படிப்பட்ட நிலைமையில் செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் அவர் மீண்டும் பெரிய ரவுண்டு வர வழி வகுத்தது. தொடர்ந்து சைரன், ரகுதாத்தா போன்ற படங்களில் நடித்த அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலருடன் திருமணம்: இதற்கிடையே அவர் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்ய முடிவெடுத்து கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அந்தத் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மணம் முடித்த பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிராஜா உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்பட்ட பாரதிராஜா நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார்.அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷும் சென்னை நீலாங்கரையில் இருக்கும் பாரதிராஜாவின் வீட்டுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் புதிய பஞ்சாயத்து ஒன்று தொடங்கியிருக்கிறது.
என்ன பஞ்சாயத்து?: அதாவது பாரதிராஜாவுக்கு மரியாதை செலுத்த கீர்த்தி சுரேஷ் போன்றே சத்யராஜும் சென்றிருந்தார். அப்போது ராதிகாவை அணைத்துக்கொண்டு ஆறுதல் தெரிவித்தார். அருகிலேயேதான் கீர்த்தி சுரேஷ் நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவரை சத்யராஜ் துளிக்கூட கண்டுகொள்ளவில்லை. அதை பார்த்த ரசிகர்களோ,'விஜய்யை சத்யராஜ் கடுமையாக விமர்சித்துவருகிறார். கீர்த்தியோ விஜய்யின் வெறித்தனமான ரசிகை. எனவேதான் கீர்த்தியை பார்த்து சத்யாராஜ் அப்படி கண்டுகொள்ளாமல் சென்றிருப்பார் என்று பேச்சுக்கள் தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
