Trisha: விஜயின் BMW காரில் ஏர்போர்ட்டுக்கு வந்தாரா திரிஷா?

சென்னை: பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை திரிஷா இன்று மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதில் எதும் சொல்லாமல் வேகமாக திரிஷா சென்றுவிட்ட நிலையில், விமானநிலையத்திற்கு திரிஷா வந்திறங்கிய கார் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

விவாகரத்து மனு: தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா செப்டம்பர் 27ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது கணவர், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், அந்த நடிகை உடனான உறவை முறித்துக் கொள்ளும்படி பலமுறை சொல்லியும் அதை விஜய் கேட்காததால் 2021 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டு நான் லண்டன் சென்றுவிட்டேன். அதன் பின் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்தேன். அதன் பிறகும் என் கணவர் நடிகையின் உறவை முறித்துக் கொள்ளாததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து தான் வாழ்கிறோம். இதனால் விவாகரத்து வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார் சங்கீதா.

ஜோடியாக வந்தனர்: விஜயின் மனைவி சங்கீதா வெளிப்படையாக நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாக கூறிய நிலையில், ஏஜிஎஸ் இல்ல திருமண விழாவில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரே நிற உடையில், ஒரே நிற காரில் வந்து இறங்கியது மிகப்பெரிய அளவில் பேசும் பொருளானது. விஜய்க்கு முட்டுக்கொடுத்தவர்கள் எல்லாம் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.

Trisha Vijay BMW

அடுத்த சர்ச்சை: இந்நிலையில் நடிகை திரிஷா சென்னையில் இருந்து இன்று மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜயும் நீங்களும், திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால், இந்த கேள்விக்கு திரிஷா எந்தவிதமான பதிலையும் சொல்லாமல் வேகமாக நடந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி இருக்கும் நிலையில், தற்போது திரிஷா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பி.எம்.டபிள்யூ கார் விஜயினுடைய கார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த காரில் பதிவு எண் சரியாக தெரியாததால், உறுதியாக யாருடைய கார் என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X