விஜய்க்காக கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாரா திரிஷா?.. காரில் இருந்த விஷயம்.. காரணம் இப்படி சொல்றாங்களே

சென்னை: நடிகை திரிஷா நடிப்பில் இந்த வருடத்தில் கருப்பு படமும், விஸ்வம்பரா படமும் வரவிருக்கின்றன. இரண்டு படங்களிலுமே அவர்தான் ஹீரோயின். இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும்படி திரிஷா நடித்துவருவது அனைவருக்கும் ஆச்சரியத்தைதான் ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் வாழ்க்கையில் திரிஷாவின் பெயர் ரொம்பவே அடிபட்டுவருகிறது. இந்நிலையில் திரிஷா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓட ஆரம்பித்திருக்கிறது.

திரிஷாவை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னர் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இப்போதைய கணக்குப்படி கால் நூற்றாண்டை நிறைவு செய்யவிருக்கிறார். இத்தனை வருடங்களில் அவர் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். குளியலறை வீடியோ, ராணா டகுபதியுடன் காதல் என்ற கிசுகிசு, வருண் மணியனுடன் நடந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாமல் முடிந்தது என லிஸ்ட் நீளம். அதையெல்லாம் அவர் அசால்ட்டாகவே எதிர்கொண்டு மீண்டு வந்துவிட்டார்.

Did Trisha Krishnan Change Religion Viral Clue Raises Questions Amid Vijay Buzz
Photo Credit:

விஜய் வாழ்க்கையில்: மேலும் விஜய்யுடன் அவர் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி படங்களில் நடித்தபோதே இரண்டு பேரையும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் பத்து வருடங்களுக்கும் மேலாக நடிக்காமல் இருந்தார்கள். பிறகு லியோ படத்தில் நடித்தார்கள். அப்போதிருந்து விஜய்யின் வாழ்க்கையில் திரிஷா ரீ என்ட்ரி கொடுத்ததாகவும்; அதனால்தான் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டு இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது என்பது பலரது வாதம். சங்கீதாவும் தனது விவாகரத்து மனுவில் ஒரு நடிகை என பெயரை குறிப்பிடாமல் கூறியிருந்தார். அது திரிஷாதான் என்று அனைவருமே உறுதியாக சொன்னார்கள்.

உறுதி செய்த ஜோடி: அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யும், திரிஷாவும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்து நின்றார்கள். இருக்கும் பிரச்னையில் இதுவேறயா என்று நொந்துகொண்டார்கள் விஜய்யின் ரசிகர்கள். மேலும் நயன்தாராவை எப்படி ஒருகாலத்தில் கேரக்டரை வைத்து மட்டமாக பேசினார்களோ அதைவிட அதிகமாகவே திரிஷாவையும் பேசினார்கள். இவரோ அத்தனைக்கும் அமைதியாகவே இருக்கிறார். நேற்றுகூட தனது தாயுடன் வந்து கூலாக வாக்களித்துவிட்டு சென்றார். அவர் வந்தபோது அங்கிருந்த சிலர், 'இளம் தலைவர் வாழ்கவே' என கோஷமிட்டதும் சலசலப்பை உண்டு செய்திருக்கிறது.

திரிஷா செய்த செயல்: அதேபோல் திரிஷாவும் சும்மா இருக்கவில்லை. தான் வாக்களித்த புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் தன் பங்குக்கு பகிர்ந்து கில்லி பட பாடலை அதனுடன் இணைத்திருந்தார். அதன் காரணமாக அவர் விஜய்க்குதான் வாக்களித்தார் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துகொண்டார்கள். இந்நிலையில் திரிஷா பற்றி புதிய தகவல் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது நேற்று அவர் வாக்களிக்க வந்த வாகனத்தில் கிறிஸ்தவ மாலை ஒன்று தொங்கி கொண்டிருந்தது.

மதம் மாறினாரா திரிஷா?: அதை நோட் செய்த ரசிகர்களோ, என்ன திரிஷாவுடைய காரில் கிறிஸ்தவ மாலை தொங்குது. ஒருவேளை மதம் மாறிவிட்டாரோ என்ற கேள்வியை முன்வைக்க தொடங்கியிருக்கிறார்கள். ஒருவேலை விஜய்க்கும், திரிஷாவுக்கும் திருமணம் என்று வரும் தகவல்கள் எல்லாம் உண்மைதான்போல. விஜய்க்காக மதம் மாறிட்டாரோ என்றும் பேசுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ அவர் மதம் மாறவில்லை; மாறாக விஜய்யின் காரைகூட அவர் எடுத்து வந்திருக்கலாம் என்றும் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகமொத்த புதிய விவாத பொருளை திரிஷா கிளப்பிவிட்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X