விஜய் முதலமைச்சராக பதவியேற்பு.. திரிஷா என்ட்ரி.. எஸ்.ஏ.சி, ஷோபா ரியாக்ஷன் வைரல்.. என்ன நடந்தது?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அனைவருக்குமே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும்தான் கொடுத்திருக்கிறது. தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வென்று; காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கவிருக்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் பதவியேற்பு விழாவுக்கு திரிஷாவும் வருகை தந்திருந்தார்.

தவெக கட்சியின் தலைவர் விஜய்யும், அவரது தொண்டர்களும், ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகியா இரண்டு கட்சிகளையுமே பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்தது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை. எனவே மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் வேலைகளில் தவெகவின் முதற்கட்ட தலைவர்கள் விழுந்து விழுந்து ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Did Trisha Krishnan s Presence at Vijay s Oath Ceremony Upset His Parents
Photo Credit:

அதன் பலன்: அதன் பலனாக முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை கொடுத்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியையும் அது முறித்துக்கொண்டது. அந்தக் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அந்தக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் திமுகவுடனான கொள்கை கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துவிட்டன. எனவே திமுக கூட்டணி கட்சிகளின் தயவில் தவெக ஆட்சியமைப்பாதகவும் பேச்சுக்கள் வந்தன.

Also Read
அன்னையர் தினம்.. முதலமைச்சராக மகன் பதவியேற்பு.. விஜய் அம்மா செம ஹேப்பி.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க?
அன்னையர் தினம்.. முதலமைச்சராக மகன் பதவியேற்பு.. விஜய் அம்மா செம ஹேப்பி.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க?

இன்று பதவியேற்பு விழா: எப்படியோ அனைத்து தடைகளையும் தாண்டி இன்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டார்கள். சி. ஜோசப் விஜய் எனும் நான் என்று அவர் சொல்லும்போது அனைவருமே உற்சாகத்தில் ஆர்ப்பரித்தார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு நல்லாட்சியை வழங்குவார் என்பது தவெகவினரின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இனிமேல் பல வருடங்களுக்கு விஜய்தான் முதலமைச்சர் என்றும் உறுதியாக சொல்கிறார்கள்.

திரிஷா என்ட்ரி: விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு திரிஷாவும், திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனும் வந்திருந்தார்கள். அவர் அரங்கத்துக்குள் வந்தபோது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். அவரும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபாவை பார்க்கவில்லை. முக்கியமாக அவர்கள் இரண்டு பேரும் திரிஷாவின் என்ட்ரியை பார்த்து கொஞ்சம் அப்செட் ஆனது அவர்களது ரியாக்ஷன்களில் அப்செட் ஆனது தெரிந்தது. அதேசமயம் அடுத்தடுத்த தருணங்களில் திரிஷாவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தார்கள்.

என்ன பிரச்னை?: முன்னதாக விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி நடிகை ஒருவருடன் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் கூறிய நடிகை திரிஷாதான் என்று எல்லோரும் சந்தேகப்பட்ட நிலைமையில், விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு வந்திருந்தது பெரிய பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X