திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க

சென்னை: திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த வருடம் தக் லைஃப், குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. மூன்றில் குட் பேட் அக்லி மட்டுமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பற்றி பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர் திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சிம்பு, சூர்யா, தனுஷ், ரவி மோகன் என கிட்டத்தட்ட கோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். அந்தப் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதேபோல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல டாப் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்து பெரிய மார்க்கெட்டை அங்கேயும் வைத்திருந்தார். இப்படி கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் உயர இருந்தது போல் பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டலாம் என்று ஆசையில் இருந்தவருக்கு அங்கே பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

Did Udhayanidhi Stalin Stop Trisha s Wedding Suchitra s Claim Creates Stir
Photo Credit:

இப்போதும் டாப் நடிகை: இடையே அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதனை 96 படத்தில் சரி செய்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மீண்டும் டாப் ஹீரோயினாக மாறிவிட்டார். நயன்தாராவும் திருமணம் செய்துகொண்டதால் அவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த இடத்தை தற்போது திரிஷா பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிங்கிள் திரிஷா: இது ஒருபக்கம் இருக்க திரிஷாவுக்கு இப்போது 42 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. முதலில் அவர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ராணாவின் குடும்பம் அவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதால் அந்தக் காதல் கைகூடாமல் போய்விட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அதேபோல் தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. அதற்கு பல காரணங்கள் பலரால் சொல்லப்பட்டாலும்; சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் புரிதலோடு விலகி அமைதியாக கடந்து சென்றார்கள்.

Also Read
விஜய் மீது சங்கீதாவின் குற்றச்சாட்டுக்கள்.. அரசியலில் வளரும் செல்வாக்கை அறுக்க பிளான்?.. பின்னணியில் யார்?
விஜய் மீது சங்கீதாவின் குற்றச்சாட்டுக்கள்.. அரசியலில் வளரும் செல்வாக்கை அறுக்க பிளான்?.. பின்னணியில் யார்?

பொதுவெளிகளில் பேச்சு: சமீப காலமாகவே திரிஷாவின் பெயரை பொதுவெளிகளில் இழுத்து ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசுகிறார்கள். அவர்களுக்கு திரிஷாவும் முடிந்த அளவு பதிலடி கொடுத்துவருகிறார். சமீபத்தில்கூட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து கடும் கண்டனங்களை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிஷா பற்றி சுசித்ரா: அவர் Cine Buzz என்ற யூடியூப் சேனலுக்கு பேசுகையில், "விஜய் வேண்டுமானால் திரிஷா மீது அன்யோன்யமான காதலில் இருக்கலாம். ஆனால் திரிஷாவோ உதயநிதி மீதுதான் அன்யோன்யமான காதலில் இருக்கிறார். அவர் மட்டுமின்றி ரம்யா கிருஷ்ணன் மீதும் அன்யோன்ய காதலில் இருக்கிறார். ஆண்களில் உதயநிதி, பெண்களில் ரம்யா கிருஷ்ணன். அதேசமயம் தனுஷின் பெயரை நன்றாக திரிஷா போட்டுவிடுவார்.

ஸ்டாலின் மருமகள் ஆக வேண்டியது: உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்டாலினின் மருமகளாக திரிஷா மாறியிருக்க வேண்டும். ஆனால் அவங்க யாரையும் திருமணம் செய்துகொள்ளமாட்டாங்க. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட காதலைத்தான் அவங்க செய்வாங்க. வருண் மணியனோடு நடக்கவிருந்த திருமணம் உதயநிதி ஸ்டாலினால்தான் நின்றது. அவர்கள் இரண்டு பேருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை உதய்யால் ஜீரணிக்கவே முடியவில்லை" என்றார்.

இந்த வீடியோவை பார்த்த திரிஷாவின் ரசிகர்களும் சுசித்ராவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் திரைத்துறையில் ஏதோ ஒரு விவாகரத்து நடந்துவிட்டால் போதும் சுசித்ரா இதே மாதிரிதான் வாய்க்கு வந்ததை பேசுகிறார். மேற்கூறிய விஷயங்கள் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது நிச்சயம் அவதூறாகத்தான் இருக்கும். இவை அத்தனைக்கும் திரிஷா தரமான பதிலடியை கொடுப்பார் என கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X