நீங்க எதை திங்குறீங்க?.. ஏதாவது சொல்லிட போறேன்.. ப்ளூ சட்டை மாறனை அட்டாக் செய்த வனிதா விஜயகுமார்?

சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா; சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தொடர்ந்து திருமண சர்ச்சைகளிலும் சிக்கிய அவர்; இப்போது சிங்கிளாகவே இருக்கிறார். அதுமட்டுமின்றி மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தையும் இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் எந்த ஓடிடியும் வாங்காததால் யூடியூபில் படத்தை ரிலீஸ் செய்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ப்ளூ சட்டை மாறனை அட்டாக் செய்வது மாதிரியே இருந்தது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இயங்கிவருபவர் விஜயகுமார். அவரது மகள்களில் ஒருவர்தான் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து சில படங்களில் நடித்த அவர்; முதலில் ஒரு திருமணம் செய்துகொண்டார். அந்த திருமண உறவு சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதனையடுத்து இன்னும் சில திருமணங்களை செய்த அவர்; அதுவும் ஒத்துவராததால் அதிலிருந்து உடனடியாக வெளியே வந்தார். இதன் காரணமாக அவரது பெர்சனல் வாழ்க்கை அடிக்கடி பொதுவெளியில் விவாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Did Vanitha Vijayakumar Take a Dig at Blue Sattai Maran Viral Video Sparks Buzz
Photo Credit:

எதுவாக இருந்தாலும் போல்டுதான்: ஆனால் வனிதாவோ அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. தன் மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அவர் அப்படி பேசியதால் சில பிரச்னைகளும் வந்திருக்கின்றன. முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருந்தபோது; வீட்டுக்குள் அவரது சில நடவடிக்கைகள் எல்லாம் உண்மையில் ரசிகர்களுக்கு எரிச்சலைத்தான் கொடுத்தது. டைட்டில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்ற அவர்; பாதியிலேயே எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்டார்.

Also Read
விஜய் பெர்சனல் வாழ்க்கை.. வருத்தத்தில் இருக்கும் சித்தி.. இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாங்களே
விஜய் பெர்சனல் வாழ்க்கை.. வருத்தத்தில் இருக்கும் சித்தி.. இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாங்களே

இயக்குநர் அவதாரம்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அநீதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சூழல் இப்படி இருக்க இத்தனை வருடங்கள் நடிகையாக மட்டும் இருந்த அவர்; கடந்த வருடத்தில் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்தார். ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடிக்க; ஜோவிகா தயாரித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. ரிலீஸுக்கு பிறகு ஓடிடியும் வாங்க முன்வராததால் யூடியூபில் படத்தை வெளியிட்டார்கள். ஆனால் அங்கேயும் படத்துக்கு பலத்த அடிதான். விமர்சன ரீதியாக பெரிய சேதாரம்தான்.

வனிதா பேட்டி: இந்நிலையில் வனிதா விஜயகுமார் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "யார் வேண்டுமானாலும் சேனல் ஓபன் செய்யலாம். யார் வேண்டுமானாலும் ஒரு படத்தை பற்றி தவறாக சொல்லலாம். அந்த நெகட்டிவ் விமர்சனங்கள் சொல்பவர்கள் அதன் மூலம் சம்பாதிக்கலாம். ஆனால் கோடி கோடியாக பணம் போட்டு அந்த படத்தை எடுத்தவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு வரும். அவர்கள் எல்லாம் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஏதோ சொல்லிவிடப்போகிறேன்.

பெர்சனலாக: பெர்சனலாக சில விஷயங்களை பற்றியெல்லாம் நான் எங்கும் பேசுவதில்லை. ஏனெனில் நீங்கள் ஹேப்பியா?நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிந்தால் போதும். ஆனால் நான் எதனால் ஹேப்பியாக இருக்கிறேன் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாம் என மனநிலையில் நான் இருக்கிறேன்" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, ப்ளூ சட்டை மாறன்தான் அனைத்து படங்களையும் பாரபட்சம் இல்லாமல் கழுவி ஊற்றுவார். அவரைத்தான் வனிதா அட்டாக் செய்திருப்பதாக கமெண்ட்ஸ்கள் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X