கூலி படத்தில் பூஜா ஹெக்டே மோனிகா பெல்லூசியாக மாறியிருக்கிறாரே?.. அவர் யார் தெரியுமா?

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜய்யுடன் இணைந்து 'ஜனநாயகன்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டே நடிக்கும் படங்களில், அவரது நடனத் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு பாடலாவது இடம்பெற்று விடுகிறது. குறிப்பாக, தமிழில் அவர் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய 'அரபிக் குத்து' மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஆடிய 'புட்டபொம்மா ' உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது.

Did you know all about Monica Belluci who mentioned in Pooja Hegde s Coolie song
Photo Credit:

இந்த வருடம் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. சூர்யாவுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளியான 'ரெட்ரோ' படத்தில் இடம்பெற்ற 'கனிமா' என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் கூட பட்டையை கிளப்பியது. குறிப்பாக 'கனிமா' பாடலில் பூஜா ஹெக்டேவின் நளினம் ரசிகர்களை ஈர்த்தது. தற்போது இப்பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

மோனிகாவுக்கு 11 மில்லியன் பிளஸ் ஐ லவ் யூ: இந்நிலையில், கூலி படத்திலிருந்து வெளியான 'மோனிகா' எனும் பாடலில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடி உள்ளார். இந்த பாடலால் சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டே ட்ரெண்டிங் ஆகி வருகிறார். இப்பாடலில் பூஜா ஹெக்டேவின் தோற்றம், நடை, உடை, பாவனை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வைரலாக தொடங்கிய இப்பாடல், தற்போது வரை யூடியூப்பில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் பாடல் போலவே தெலுங்கிலும் அதிக வரவேற்பை இந்த பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரு இந்த மோனிகா பெல்லூசி: 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 2000ம் ஆண்டு வெளியான மெலினா (Malena) திரைப்படம் மூலம் உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த மோனிகா பெல்லூசி. இத்தாலிய நடிகையான இவரை தெரியாத உலக சினிமா ரசிகர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு கவர்ச்சியாகவும், திறமையாகவும் ஆடைகளை துறந்து செம போல்டாகவும் நடித்தவர் தான் மோனிகா பெல்லூசி. மெலினா படத்தின் வெற்றிக்குப் பிறகு மேட்ரிக்ஸ் ரீலோடட் படத்தின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களையும் இவர் கவர்ந்தார். பூஜா ஹெக்டேவை கூலி படத்தின் மோனிகா பாடலில் ஆரம்பத்தில் மோனிகா பெல்லூசி என்றே வர்ணிக்கப்பட்டு பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியிருப்பது கோலிவுட் ரசிகர்களை ஏகப்பட்ட எக்ஸ்பெக்டேஷன்களில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X