மேடையில் கண்ணீர் விட்டு அழுத சாய் பல்லவி...என்ன காரணம் தெரியுமா ?

ஐதராபாத் : சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள ஷ்யாம் சிங்கா ராய் படம் டிசம்பர் 24 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, மேடையில் கண் கலங்கி அழுத நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நானி ஹீரோவாக நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. ரிலீசுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

பாராட்டிய டைரக்டர்

பாராட்டிய டைரக்டர்

இதில் துவக்கத்தில் பேசிய டைரக்டர் ராகுல் சன்கிருத்யன், படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினார். இந்த படத்தில் சாய் பல்லவியின் அட்டகாசமான நடிப்பை டைரக்டர் பாராட்டி பேசிய போது ரசிகர்கள் இடைவிடாமல் சாய் பல்லவியின் பெயரை சொல்லி கூச்சலிட ஆரம்பித்தனர்.

புல்லரித்த சாய் பல்லவி

புல்லரித்த சாய் பல்லவி

மேடையில் அமர்ந்திருந்த சாய் பல்லவியை பார்த்து அவரது ரசிகர்கள் கோஷம் போட்டு அரங்கத்தையே அதிர வைத்தனர். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த படங்களில் கேரக்டர்களின் பெயர்களை சொல்லி அழைத்து, சாய் பல்லவியை புல்லரிக்க வைத்தனர் ரசிகர்கள்.

இதற்காகவா அழுதார்

இதற்காகவா அழுதார்

ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து போன சாய் பல்லவி, மேடையில் அனைவரின் முன்னிலையிலும் கண் கலங்கி அழுக துவங்கினார். கண்ணீரோடு பேசிய அவர், இந்த அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் நடிப்பதற்கு என்னை விட திறமையான பலர் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆறுதல் சொன்ன நானி

ஆறுதல் சொன்ன நானி

ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பும், புகழும் கிடைக்கிறது. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்காக டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார். எமோஷனலாகி அழுத சாய் பல்லவியை நானி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இந்த படத்தில் சாய் பல்லவி தேவதாசி பெண்ணாக மிக அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார்.

Recommended Video

Sai Pallavi-யும் நானும் ஒன்னு இல்லை | Pooja Kannan ரசிகர்களுக்கு வேண்டுகோள் | Chithirai Sevvanam
ஆச்சரியப்பட்ட விஐபி.,க்கள்

ஆச்சரியப்பட்ட விஐபி.,க்கள்

சாய் பல்லவிக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து மேடையில் அமர்ந்திருந்த மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் ஆச்சரியப்பட்டனர். அதிலும் வருங்காலத்தில் சாய் பல்லவி மிகப் பெரிய நடிகையாக வருவார் என்றதும் ரசிகர்கள் பெரிய அளவில் கரகோஷம் எழுப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X