நயன்தாரா மாதிரி ஒரு திறமையை பார்க்க முடியாது... கனெக்ட் பட டைரக்டர் புகழ்ச்சி
சென்னை : நடிகை நயன்தாரா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Recommended Video
இதையொட்டி அவரது தயாரிப்பில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் நயன்தாராவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேர்ந்திருந்தார் நயன்தாரா.

நயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தொடர்ந்து அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாக உள்ளது. படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

புதிய பட அறிவிப்பு
படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா -விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சிறப்பாக நடத்தி பல படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் புதிய பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 போஸ்டர்கள் வெளியீடு
பேய் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இரண்டு போஸ்டர்களை இன்றைய தினம் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் படத்திற்கு கனெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. வித்தியாசமான வகையில் இந்த போஸ்டர்கள் காணப்படுகின்றன.

அஸ்வின் சரவணன் இயக்கம்
படத்தை அஸ்வின் சரவணன் இயக்கவுள்ளார். மாயா படத்திற்கு பிறகு அஸ்வின் சரவணன் -நயன்தாரா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதுகுறித்து டைரக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் திறமையான நயன்தாரா தனது படத்தில் நடிக்கவுள்ளது குறித்து நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் சரவணன் மகிழ்ச்சி
இதற்கென விக்னேஷ் சிவன் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த தனக்கு வார்த்தைகள் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். படத்தின் இரண்டு போஸ்டர்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











