Bala - வில்லன் மிதித்ததில் முறிந்த நடிகையின் எலும்பு.. நடிகையை ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடாய் படுத்திய பாலா
சென்னை: Bala (பாலா) கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குநர் பாலா. அவர் தற்போது அருண் விஜய்யை வைத்து பல பிரச்னைகளை கடந்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். அவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகிவருகிறது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிடித்த நடிகை: இந்நிலையில் எப்போதும் யார் பற்றியும் அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் பாலா பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒரு விருது வழங்கும் விழாவில் தனக்கு பிடித்த நடிகை வரலட்சுமிதான் என்று சொல்லியிருக்கிறார். அந்த விழாவில் பேசிய பாலா, "நான் கொஞ்ச ஹீரோயின்ஸ்கூடவே ஒர்க் பண்ணிருக்கேன். அந்தவகையில் சொல்கிறேன் எனக்கு பிடித்த நடிகை என்றால் வரலட்சுமிதான். ஏனென்றால் தாரை தப்பட்டை படத்தில் வில்லன் ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமியின் தோள்பட்டையில் ஓங்கி மிதிக்க வேண்டும்.
ஷாட் கொஞ்சம் சரியாக வர வேண்டும் என கத்தியதால் அவர் உண்மையிலேயே முதல் டேக்கிலேயே மிதித்துவிட்டார். அது எனக்கு தெரியாது. இப்படி 2,3 டேக்குகள் போய்விட்டோம். பிறகுதான் நான் ஓகே சொன்னேன். ஆனால் முதல் டேக்கிலேயே வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு க்ராக் ஆகியிருக்கிறது. ஆனால் அவர் என்னிடம் சொல்லவே இல்லை. பிறகு ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஷூட்டிங் வந்த அவர்; க்ராக் ஆன எலும்பின் எக்ஸ்ரேவை காண்பித்தார்.
நான் உடனே என்னம்மா இது சிஜியா என்று கேட்டேன். அவர் உடனே வாடிய முகத்தோடு இல்லை சார் உண்மையிலேயே உடைந்துவிட்டது. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன் என சொன்னார். அந்த அளவுக்கு வரலட்சுமி கடின உழைப்பாளி. அதனால்தான் அவரை பிடிக்கும்" என்றார்.
ஃபார்ம் அவுட்: முன்னதாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் சறுக்கல் ஏற்பட்டது. அதாவது அவரது மனைவி மலருக்கும் பாலாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே மனஸ்தாபம் இருந்து வந்தது. இதன் காரணமாக தன்னுடைய படைப்புகளிலும் அவரால் ஒழுங்காக கவனத்தை செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து இயக்கிய வர்மா படம் ஒழுங்காக வரவில்லை. படத்தை பார்த்து அப்செட்டான விக்ரம் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது.
வணங்கான்: விக்ரம் அப்படி சொன்னது கண்டிப்பாக பாலாவுக்கு அவப்பெயர்தான்.குறிப்பாக பாலாவுக்காக விக்ரம் எதை வேண்டுமானாலும் செய்வார். ஆனால் பாலாவைவிட தன் பிள்ளை முக்கியம்தானே. அந்த அடிப்படையில் விக்ரமின் மூவ் இருந்தது. அதுதான் பிரச்னையில் முடிந்தது என்றால் அடுத்ததாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். அவரும் அந்தப் படத்தில் ஒரு ஷெட்யூலில் நடித்துவிட்டு பிறகு விலகிவிட்டார்.
பழைய பன்னீர்செல்வம்: இது பாலாவுக்கு மேற்கொண்டு ஒரு அடியை கொடுத்தது. எனவே பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வரும் நோக்கத்தில் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை சைலெண்ட்டாக முடித்துவிட்டார். இது பாலாவின் சைலெண்ட் சம்பவமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











