ஷூட்டிங்கிற்கு வர முரண்டு பிடித்த ஹீரோயின்... காலில் விழுந்து கெஞ்சிய இயக்குநர்!

காமெடி கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது யாத்ரா.

சென்னை: படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் முரண்டு பிடித்த ஹீரோயின் காலில் விழுந்து தனது யாத்ரா படத்தை முடித்தாராம் இயக்குனர் எம்.கே.முருகன்.

ஸ்ரீசாய் லக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் எம்.கே.முருகன் தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் யாத்ரா. புதுமுகங்கள் அர்ஜுன், யோகேஷ், மாயா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கோவை, பொள்ளாச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் எம்.கே.முருகன் ஒன்இந்தியாவிடம் படம் குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது,

சினிமா அனுபவம்

சினிமா அனுபவம்

" சினிமா துறையில் நான் கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், புரோடக்ஷன் மேனேஜர் என எல்லா வேலைகளையும் செய்துள்ளேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன்.

வித்தியாசமாக பழிவாங்கும் பேய்

வித்தியாசமாக பழிவாங்கும் பேய்

தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் பெண்ணின் ஆவி தான் படத்தின் மையக்கரு. இது வழக்கமான பேய் கதை தான் என்றாலும், மிகவும் ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துள்ளோம். பேய் பழிவாங்கும் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

படப்பிடிப்பில் பிரச்சினை

படப்பிடிப்பில் பிரச்சினை

படப்பிடிப்பின் போது பல இன்னல்களை நாங்கள் சந்தித்தோம். படக்குழுவில் யாருக்காவது ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருந்தது. மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பிரச்சினை செய்த ஹீரோயின்

பிரச்சினை செய்த ஹீரோயின்

இந்த படத்தின் ஹீரோயின் மாயா பல பிரச்சினைகளை கொடுத்துவிட்டார். ஒரு நாள் நாமக்கல்லில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது, திடீரென பெட்டியை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு போவதாகக் கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.

காலில் விழுந்த இயக்குனர்

காலில் விழுந்த இயக்குனர்

எவ்வளவு கெஞ்சியும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் பிரச்சினை செய்தார். ஒருவழியாக அவரது காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி அவரை நடிக்க வைத்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது. இப்போது கூட பட புரொமோஷன்களுக்கு வராமல் பிரச்சினை செய்கிறார்.

2019ல் ரிலீஸ்

2019ல் ரிலீஸ்

பெரும்பான்மை படத்தொப்பு முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் யாத்ரா திரைக்கு வரும்", என நம்பிக்கையுடன் கூறினார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X