Gautham menon: துருவ நட்சத்திரம் படத்துக்காகத்தான் நடிக்கவே துவங்கினேன்.. கௌதம் மேனன் சொன்னத பாருங்க
சென்னை: இயக்குநர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் இந்தப் படம் துவங்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் முடங்கியது.
இதனிடையே கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங்கை மீண்டும துவங்கிய கௌதம் மேனன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்திற்காகத்தான் நடிக்கவே துவங்கியதாக கௌதம் மேனன் பேட்டி: நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார் என நட்சத்திரப்பட்டாளமே நடிக்க கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது துருவ நட்சத்திரம் படம். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய 80 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் முடங்கியது. இந்தப் படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில் தற்போது படம் மீண்டும் தூசித்தட்டப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
வரும் நவம்பர் 24ம் தேதி துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தில் விக்ரமை ஸ்டைலிஷ்ஷான ஜான் என்ற கேரக்டரில் பார்க்க முடிகிறது. இந்தப் படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியான நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங்கை மீண்டும் துவங்கிய கௌதம் மேனன் படத்தின் எஞ்சிய படக்காட்சிகளை எடுத்து முடித்துள்ளார்.
படத்தின் ப்ரமோஷன்கள் தற்போது சிறப்பாக துவங்கப்பட்டுள்ளன. முன்னதாக படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றிருந்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. இதையொட்டி படத்தில் அவர் சம்பந்தபட்ட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினரோ ஐஸ்வர்யா ராஜேஷோ மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பிரபல ஆங்கர் டிடி கொடுத்துள்ள பேட்டியொன்றில் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய தான் மேற்கொண்ட பிரச்சினைகளை கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் உள்ள கௌதம் மேனன், இந்தப் படத்தின் ரிலீசுக்காகவே தான் படங்களில் நடிக்க வந்ததாகவும் மற்றபடி நடிப்பில் தனக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றும் கூறியுள்ளார். படங்களில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் சம்பளத்தை இந்தப்படத்தின் ரிலீசுக்காக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் நடிப்பதற்காக தான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்கவில்லை என்றும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தான் சிறப்பாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு ஒத்துவராது என்று தான் கருதிய சில நடிப்பு வாய்ப்புகளை தான் நிராகரித்துள்ளதாகவும் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் தன்னுடைய நடிப்பு கேரியரை துவங்கிய கௌதம் மேனன் தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











