Don't Miss!
- News
கடுமையான போட்டி.. அதிமுக வேட்பாளர் அறிவிப்பதற்கு தாமதமாக காரணம் இதுதான்.. எஸ்பி வேலுமணி பேச்சு!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Finance
பட்ஜெட் 2023: வரலாற்று நிகழ்வு.. பெண் ஜனாதிபதி, பெண் நிதி அமைச்சர்..! களைகட்டும் நாடாளுமன்றம்..!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாவ்… இணையத்தில் வைரலாகும் மணிரத்னம், சுஹாசினி திருமண புகைப்படம்!
சென்னை : மணிரத்னம், சுஹாசினி திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மூத்த நடிகர் சாரு ஹாசனின் மகளான இவர்,1988ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.
ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்
நேற்று இந்த நட்சத்திர தம்பதிகள் தங்களது 33வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுஹாசினி இந்த புகைப்படங்களை இனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
லீக்கான ஐஸ்வர்யா ராய்யின் ஃபோட்டோ... கடுப்பான மணிரத்னம் செய்தது என்ன?

சிறந்த படைப்பாளி
இந்திய சினிமாவின் தலைசிறந்த திரைப் படைப்பாளிகளில் ஒருவர் மணிரத்னம். இவர், திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த குடும்பத்தில் பிறந்தவர். எம்பிஏ பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். சிறு வயதில் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் வளரும் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் எனும் உந்துதலையும் அளித்தன. திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருந்தபோது மகேந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோரின் திரைப்படங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.

பல்லவி அனுபல்லவி முதல் படம்
தான் எழுதிய முதல் திரைக்கதையைத் தானே இயக்குவது அல்லது தன்னைக் கவர்ந்த மூன்று இயக்குநர்களில் ஒருவரிடம் கொடுத்து இயக்கவைப்பது என்று தீர்மானித்தார். ஆனால் மூவருமே அதற்குச் சம்மதிக்கவில்லை. இந்தச் சூழலில் அந்தக் கதையைக் கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்தார். 1983ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மணிரத்னம்.

வணிகரீதியாக தோல்வி
அனில் கபூர், லட்சுமி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தார். இருப்பினும் பல்லவி அனுபல்லவி வணிக வெற்றியைப் பெறவில்லை. எனினும், இந்த திரைப்படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டுகளும் கிடைத்தன. மேலும், இப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக அரசின் விருதை வென்றார் மணிரத்னம். முதல் படத்திலேயே விருதை பெற்று அனைவரையும் வியக்க வைத்தார் .

பொன்னியின் செல்வன்
ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து, இந்திய சினிமாவின் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளியாகத் திகழ்கிறார் மணிரத்னம். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் வரிசையை வைத்து அவர் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. மணிரத்னத்தின் நெடுநாள் கனவுப் படைப்பை அதுவும் மிகப் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான உழைப்பை கொடுத்து உருவாக்கி வருகிறார். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகத்திற்கான படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலிரியில் நடந்து வருகிறது.

திருமண புகைப்படம்
இந்நிலையில் சமூகவலைதளத்தில் மணிரத்னம் , சுஹாசினியின் திருமண புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் இந்த புகைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவற்றை அவர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

முன்னணி நடிகை
80களில் முன்னணி நடிகையாக இந்த சுஹாசினி ரஜினி,கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மூத்த நடிகர் சாரு ஹாசனின் மகளான இவர், மீண்டும் கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிஇருக்கிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், 1988ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகள் நேற்று தங்களது 33 வது திருமண நாளை கொண்டாடினார்கள். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுஹாசினி இந்த அரிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.