ஷங்கர் மகளை தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குரின் மகள்.. யாருன்னு பாருங்க!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மகளை தொடர்ந்து மற்றொரு இயக்குரின் மகளும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகளும் சினிமாத்துறைக்குள் நுழைவது தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமா இதுவரை பல வாரிசுகளை கண்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் படங்களில் நடித்து வருகின்றனர்.

சினிமாவில் வாரிசுகள்

சினிமாவில் வாரிசுகள்

இதேபோல் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசியின் மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகா உள்ளிட்ட பலர் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

விருமன் படத்தில் ஷங்கர் மகள்

விருமன் படத்தில் ஷங்கர் மகள்

அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உச்ச நட்சத்திரங்களுடன் சந்திப்பு

உச்ச நட்சத்திரங்களுடன் சந்திப்பு

முதல் முறையாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அதிதி ஹைதராபாத் சென்று தெலுங்கு முன்னணி இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து ஆசி பெற்றார். அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

மின்சார கனவு இயக்குநர்

மின்சார கனவு இயக்குநர்

இந்நிலையில பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். கேரளாவை பூர்விகமாக கொண்டவர் ராஜீவ் மேனன். 1997ஆம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் ஆகியோரது நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கடைசியாக புத்தம் புது காலை

கடைசியாக புத்தம் புது காலை

தொடர்ந்து கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக புத்தம் புது காலை படத்தை இயக்கினார் இயக்கியிருந்தார் ராஜீவ் மேனன். ராஜீவ் மேனன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கதாநாயகியாக அறிமுகமாகும் மகள்

கதாநாயகியாக அறிமுகமாகும் மகள்

ராஜீவ் மேனனுக்கு சரஸ்வதி, லக்ஷ்மி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மகள் சரஸ்வதியை கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் ராஜிவ் மேனன். தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார்.

Recommended Video

கதையை கேட்டுட்டு Gautham Menon சொன்னது | Director Mohan G | Rudra Thandavam | Filmibeat Tamil
விரைவில் படத்தின் பணிகள்

விரைவில் படத்தின் பணிகள்

நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X