பிரியதர்ஷன், ஷங்கர் மகளை தொடர்ந்து ஹீரோயினாகும் ராஜீவ் மேனன் மகள்
சென்னை : இந்திய சினிமாவில் வாரிசு நடிகர்கள் வருவது பல காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஹீரோக்களின் மகன்கள் தான் ஹீரோக்களாகி வந்தனர். பிறகு ஹீரோயின்களின் மகள்கள், மகன்கள், பாடகர்களின் வாரிசுகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக துவங்கினர்.
பாடகர், இசையமைப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் வாரிசுகள் வரத் துவங்கி விட்டனர்.
டாப் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகி வந்த நிலையில் தற்போது டைரக்டர்களின் மகள்கள் ஹீரோயின் ஆகி அறிமுகமாகி வருவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

சிம்பு நாயகியான கல்யாணி
சிம்பு நடித்த மாநாடு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் பிரபல டைரக்டரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். அவரைத் தொடர்ந்து டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

ஹீரோயினாகும் ஷங்கர் மகள்
சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும், கார்த்தி ஹீரோவாக நடிக்கும் விருமன் படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். முதல் படத்தின் அறிமக போஸ்டரிலேயே பாவடை தாவணியில் வந்த ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார் அதிதி. தொடர்ந்து அட்ராக்டிவான ஃபோட்டோஷுட்களையும் நடத்தி அசத்தி வருகிறார் அதிதி.

அடுத்து களமிறங்கும் வாரிசு நடிகை
இந்நிலையில் அடுத்தபடியாக பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம். டைரக்ரை் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில், வசந்த் ரவிக்கு ஜோடியாக தான் சரஸ்வதி நடிக்க உள்ளாராம். வசந்த் ரவி, டைரக்டர் ராம் இயக்கிய தரமணி படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்.

இவ்வளவு திறமைகளா
சரஸ்வதி தற்போது மிஸ்ஸ்கிரீன் சினிமாசில் கதை எழத்தாளர் மற்றும் டைரக்டராக இருந்து வருகிறார். இவர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் படத்தில் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடி உள்ளார். டைரக்டர், எழுத்தாளர், பாடகர், டான்சர் என பல திறமைகளைக் கொண்டவராம் சரஸ்வதி.

எப்போ படம் ஆரம்பம்
அருண் மாதேஸ்வரன் தற்போது செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணி காயிதம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்த பிறகு சரஸ்வதி ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தை இயக்க போகிறாராம்.


Click it and Unblock the Notifications











