சமந்தாவிடம் நெருக்கம் காட்டும் இயக்குநர்.. செம காண்டில் இருக்கும் டைரக்டர் மனைவி.. பஞ்சாயத்து உறுதி?
சென்னை: சமந்தா இப்போது மீண்டும் பழையபடி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்த அவர் அடுத்ததாக சுபம் படத்தை தயாரித்தார். மேலும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர் இப்போது இயக்குநார் ராஜை காதலித்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அமைதியே காத்துவருகிறார்கள். இந்நிலையில் ராஜின் முன்னாள் மனைவி காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில காரணங்களால் பாதியில் முடிந்தது. மணமுடித்த பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் முக்கிய காரணம் என்று இன்றளவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்து எந்தவித கருத்தையும் விஷயத்தில் தொடர்புடைய சைதன்யாவும், சமந்தாவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மையோசிடிஸ்: இதற்கிடையே சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோயும் வந்தது. அதன் காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர் ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்டுவிட்டார். இருப்பினும் விவாகரத்துக்கு இந்த நோயும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிலெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நோயிலிருந்து மீண்ட அவர் குஷி, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.

சிட்டாடல்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார் சாம். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான வெப் தொடர் மெகா ஹிட்டடித்ததால் இதன் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. சமந்தாவும் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. ஆக்ஷன், ரொமான்ஸ் என அத்தனை ஏரியாக்களிலும் பட்டையை கிளப்பினார் அவர்.
இயக்குநருடன் நெருக்கம்: சூழல் இப்படி இருக்க அந்த வெப் சீரிஸின் இயக்குநரான ராஜ் நிடிமோருவுடன் சமந்தா சமீப காலமாக நெருக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் தீவிரமாக காதலித்துவருவதாகவும் பாலிவுட்டில் கிசுகிசுக்கள் வர தொடங்கியிருக்கின்றன. அதுமட்டுமின்றி சமீபத்தில்கூட சாம் துபாய்க்கு சென்றிருந்தார். அவருடன் ராஜும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இரண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்று உறுதியோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே திருமணம்: இதற்கிடையே இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கிறது. ஷ்யாமிலி என்பவரை திருமணம் செய்திருந்த அவர் சில காரணங்களால் அவரை பிரிந்திருக்கிறார். இப்போது சமந்தாவுடன் ராஜ் நெருக்கம் காட்டிவருவதை பார்த்த அவரது முன்னாள் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து காட்டமாக போஸ்ட்டுகளை போட்டுவருகிறார். அவற்றின் மூலம் சமந்தாவைத்தான் மறைமுகமாக தாக்குகிறார் என்றே பலரால் கருதப்படுகிறது.
சமீபத்திய போஸ்ட்: இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நம்பிக்கைதான் ரொம்பவே விலை உயர்ந்தது. ஒருமுறை அது போய்விட்டால் எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் கிடைக்காது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் போஸ்ட் சமந்தாவுக்குத்தான். இப்போது அவரை சுற்றி மீண்டும் பிரச்னை வர ஆரம்பித்துவிட்டதே என்று கமெண்ட்ஸ்கள் பறந்துகொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











