நடிகையிடம் நைசா பேசி நிர்வாண புகைப்படங்களை வாங்கி விற்பனை செய்த இயக்குனர்

By Siva

மும்பை: மும்பையை சேர்ந்த மாடலும், நடிகையுமான அவந்திகா காவ்கர் தனது நிர்வாண புகைப்படங்களை ஊடகத்திற்கு விற்ற இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் அவந்திகா காவ்கர். நடிகையும், மாடலுமான அவரின் நிர்வாண புகைப்படங்கள் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த அவந்திகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனது நிர்வாண புகைப்படங்களை அந்த இணையதளத்திற்கு விற்ற இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவந்திகா கூறியதாவது,

இயக்குனர்

இயக்குனர்

நெட்பிளிக்ஸில் வரும் வெப்சீரிஸ் ஒன்றுக்காக எனது நிர்வாண புகைப்படங்களை சென்னையை சேர்ந்த இயக்குநர் ராகேஷ்நாத் வெங்கட் ராவ் கேட்டார். அவர் வார்த்தையை நம்பி நானும் நிர்வாண புகைப்படங்களை அனுப்பினேன்.

 அவந்திகா

அவந்திகா

நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்புமாறும் கூறினார். நல்ல வேளை நான் வீடியோவை அனுப்பவில்லை. அவர் என்னிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதை தற்போது தெரிந்து கொண்டேன்.

 இணையதளம்

இணையதளம்

ராவ் எனது நிர்வாண புகைப்படங்களை மும்பையை சேர்ந்த பிரபல பத்திரிகையிடம் விற்க முயன்றுள்ளார். அவர்கள் வாங்காததால் இணையதளம் ஒன்றிடம் விற்றுவிட்டார். என் புகைப்படங்களை விற்பனை செய்ய நான் அவருக்கு அதிகாரம் அளித்ததாக போலி கடிதம் ஒன்று தயார் செய்து விற்றுள்ளார்.

 கையெழுத்து

கையெழுத்து

அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடையது அல்ல. ராவ் மீது நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்று அவந்திகா தெரிவித்துள்ளார். கோவாவில் பிறந்த ஹாலிவுட் இயக்குனரான ஜேசன் பெர்ணான்டஸ் தான் இயக்கும் வெப்சீரிஸுக்காக நிர்வாண புகைப்படங்களை கேட்டார் என ராவ் கூறினார் என்று அவந்திகாவின் மேனேஜர் கூறியுள்ளார்.

 பொய்

பொய்

நான் யாரிடமும் நிர்வாண புகைப்படமோ, வீடியோவோ கேட்கவே இல்லை. வெங்கட் ராவ் என்பவர் என் பெயரை பயன்படுத்தியுள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன். என் தயாரிப்பு நிறுவனம் சர்வதேச வெப்சீரிஸுக்காக பலரை ஒப்பந்தம் செய்து வருகிறது. ஆனால் இதுவரை யாரிடமும் நிர்வாண புகைப்படங்களை கேட்டது இல்லை என்று இயக்குனர் ஜேசன் பெர்ணான்டஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X