நேரத்தை ஏன் வேஸ்ட் பண்ணணும்? லாக்டவுனிலும் பிரபல ஹீரோயின் பிசி.. வட்டார வழக்கில் பேச ஹோம் ஒர்க்!
சென்னை: லாக் டவுன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பிரபல நடிகை வட்டார வழக்கில் பேசிப் பயிற்சி எடுத்துவருகிறார்.
Recommended Video
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லோ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படம், புஷ்பா.
இதில் புஷ்பராஜ் என்ற லாரி டிரைவாக, அல்லு அர்ஜுன் நடிக்கிறார்

ராஷ்மிகா மந்தனா
இதை சுகுமார் இயக்குகிறார். அல்லு அர்ஜுன், சுகுமார் இணையும் மூன்றாவது படம் இது. இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது என்று கூறப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ட்விட்டரில் சாதனை
அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியான அன்றே பரபரப்பானது. குறைவான நேரத்தில் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் நல்லம்மா ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது.

பாபி சிம்ஹா
விஜய் சேதுபதி, இதில் வில்லனாக நடிக்கிறார் என்றும் பின்னர் வன அதிகாரியாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இப்போது அவர் அந்தப் படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக பாபி சிம்ஹாவை நடிக்க வைக்க உள்ளனர். கன்னட நடிகர் தனஞ்செயாவும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

5 மொழிகளில்
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது. லாக் டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று, ஒவ்வொருவருக்கும் ஹோம் ஒர்க் கொடுத்திருக்கிறார் சுகுமார். அதன்படி ஹீரோ அல்லு அர்ஜூன் உடலை ஏற்றி வருகிறார்.

சித்தூர் ஸ்லாங்
ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா படத்தில் சித்தூர் ஸ்லாங்கில் பேச வேண்டும். இதற்காக அவருக்கு ஹோம் ஒர்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஷ்மிகா சித்தூர் ஸ்லாங்கில் பேசப் பயிற்சி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதே போல காஸ்ட்யூம் டிசைனர், இசை அமைப்பாளர் ஆகியோருக்கும் ஹோம் ஒர்க் கொடுத்திருக்கிறார் சுகுமார்.


Click it and Unblock the Notifications











