பொண்ணு மாதிரி நடந்து வா.. தப தபனு வராத.. வரலட்சுமியை திட்டிய இயக்குநர்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: வரலட்சுமியின் நடிப்பில் கடைசியாக மேக்ஸ் திரைப்படம் வெளியானது. கலைப்புலி தாணு தயாரித்திருந்த அந்தப் படத்தில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடித்திருந்தார். படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் மதகஜராஜா படத்தில் நடித்தது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
வரலட்சுமி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர் தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் தாரை தப்பட்டை படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஏனெனில் அந்தப் படத்தை இயக்கியது பாலா. அவரது இயக்கம் என்றாலே அதில் நடிப்பவர்களுக்கு விருதுகளும், பெயர்களும், அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் அவருக்கோ பெயர் மட்டுமே கிடைத்தது. வாய்ப்புகள் கொஞ்சமாகத்தான் கிடைத்தன.

பிறமொழிகளிலும்: தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வரலட்சுமி தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். அந்தவகையில் கன்னடத்தில் அவர் கடைசியாக மேக்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் பெரிதாக போகவில்லை. அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. அதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: இதற்கிடையே மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதும்; அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது மகளின் காதலில் உண்மை இருந்ததால் சரத்குமார் உடனடியாக அந்தக் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். அதனையடுத்து திருமணம் தாய்லாந்திலும், ரிசப்ஷன் சென்னையிலும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
சூப்பர் வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட பொங்கலுக்கு சரத்குமாரின் குடும்பம் ஒரு வீடியோ போட்டிருந்தது. அதில் சூர்யவம்சம் சீனை ரீ க்ரியேட் செய்திருந்தார். அப்போது நிக்கோலாயை அவர்கள் ஒதுக்கிவைத்திருந்தது போல் இருந்தது ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினர். முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு வரலட்சுமி நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது.
மெகா ஹிட்: 12 வருடங்கள் கழித்து படம் ரிலீஸானாலும் தியேட்டரில் அப்ளாஸை அள்ளியது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் அந்தப் படம் ரசிகர்களால் பொங்கல் வின்னர் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் வரலட்சுமி கொஞ்சம் ஓவர் கிளாமராகவே நடித்திருந்தார். அதனைப் பார்த்த பலரும் வாயடைத்து போனார்கள். இந்நிலையில் சுந்தர்.சி குறித்து வரலட்சுமி அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
வருவின் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மதகஜராஜா படத்தில் நடித்தபோது சுந்தர் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஹீரோயின் இன்ட்ரோ சீன் ஒன்று இருக்கும். அதில் நான் நடந்து வந்ததை பார்த்தபோது அவரோ என்னிடம், பொண்ணு மாதிரி நடந்து வா. சும்மா தப தபனு நடந்து வர என்று திட்டுவார். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் சுந்தர்.சி என்னை இந்தப் படத்தில் மோல்ட் செய்திருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











