»   »  'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் இயக்குனர் டார்ச்சர் செய்தார்: விஷால் பட ஹீரோயின்

'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் இயக்குனர் டார்ச்சர் செய்தார்: விஷால் பட ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர், உதவி இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்ததாாக நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை மாதவி லதா. தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆன அவர் விஷாலின் ஆம்பள படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் அவர் திரையுலக பயணம் பற்றி கூறுகையில்,

நடிப்பு

நடிப்பு

நடிக்க போக வேண்டாம் என்று என் குடும்பத்தார் கூறினார்கள். ஹீரோயின் ஆகாமல் வீட்டுக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறினேன். தனியாக ஹைதராபாத் வந்து பட வாய்ப்பு தேடினேன். இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்கே போகவில்லை.

இயக்குனர்

இயக்குனர்

படவாய்ப்பு கிடைத்தவுடன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னிடம் டீசன்டாக பேசினார்கள். நாம் நட்பாக இருக்கலாமா என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதன் அர்த்தம் புரியாமல் நாம் நல்ல நண்பர்கள் தானே என்றேன்.

வேறு மாதிரி

வேறு மாதிரி

இல்லை இல்லை இது வேறு நட்பு என்றார்கள், அதன் பிறகே அர்த்தம் புரிந்தது. இது குறித்து என் நண்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப அது என்னை வேறு விஷயத்திற்கு அழைத்த இயக்குனருக்கே தவறுதலாக சென்றுவிட்டது.

கொடுமை

கொடுமை

என் எஸ்.எம்.எஸ்.ஸை பார்த்த பிறகு படப்பிடிப்பு தளத்தில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். கேரவனை எடுத்துவிட்டார்கள், ஹோட்டல் அறையை மாற்றிவிட்டார்கள். மரத்தடியில் தான் மேக்கப் போட வேண்டும். 55 நாட்கள் டார்ச்சர் செய்தார்கள்.

உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள் கூட என்னிடம் மோசமாக நடந்தார்கள். என் அம்மாவை என்னுடன் வரவிடவில்லை. படப்பிடிப்பு தளத்தில் என் தந்தையாக நடித்தவரை தவிர வேறு யாரிடமும் என்னை பேச அனுமதிக்கவில்லை.

குரு

குரு

ஆசிரியர் தினத்தன்று இயக்குனருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். இவ்வளவு கஷ்டம் கொடுத்தும் வாழ்த்துகிறாயா என்று கேட்டார். ஆமாம் சார் நீங்கள் என் குரு என்றேன்.

மன்னிப்பு

மன்னிப்பு

இயக்குனரிடம் மன்னிப்பு கேளுங்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று உதவி இயக்குனர் ஒருவர் போன் செய்து கூறினார். நான் முடியாது என்று கூறிவிட்டேன் என லதா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Madhavi Latha said that directors and assistant directors behaved badly with ther as she refused to satisfy them sexually.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil