Ramya Krishnan: நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் விவாகரத்தா.. முதல்முறையாக பேசிய கணவர் வம்சி!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு படம் மூலம் கடந்த 1983ம் ஆண்டில் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் அடுத்தடுத்து இவர் நடித்து வருகிறார். இயக்குனர் வம்சியை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனை இயக்குநர் வம்சி விவாகரத்து செய்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை தற்போது இயக்குனர் வம்சி மறுத்துள்ளார். படங்களின் கமிட்மெண்ட் காரணமாகவே தாங்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 1983ம் ஆண்டில் தமிழில் வெளியான வெள்ளை மனசு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இருந்தபோதிலும் ரஜினிகாந்துடன் இவர் நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் இவருக்கு மிக சிறப்பாக அமைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் இவரை கொண்டு சென்றது. வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் குறையல படையப்பா என்று நீலாம்பரியாக அழகு காட்டுவார் ரம்யா கிருஷ்ணன்.
படையப்பா நீலாம்பரி: படையப்பா படத்தில் முதலில் ஸ்டைலிஷ்ஷாகவும் வயதான கேரக்டரில் ஹோம்லியாவும் அதே நேரத்தில் வில்லத்தனத்தை காட்டியும் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். ரஜினியை அவரது மகளை வைத்து பழிவாங்க நினைக்கும் இவரது முயற்சி முறியடிக்கப்படும் போது அவரது கோபம் எல்லை மீறுவதாக படையப்பா படத்தில் காணப்படும். இந்த படத்தில் ஒவ்வொரு சிச்சுவேஷனையும் சிறப்பாக கையாண்டு இருப்பார் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜமாதாவாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
விவாகரத்து வதந்தி குறித்து வம்சி: இயக்குனர் வம்சியை காதல் திருமணம் செய்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து செய்துவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இது குறித்து இயக்குனரும் ரம்யா கிருஷ்ணனின் கணவருமான வம்சி பேட்டியொன்றில் பேசியுள்ளார். அதில் படங்களின் கமிட்மெண்ட் காரணமாகவே தான் ஹைதராபாத்திலும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் வசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் தாங்கள் பிரிந்துள்ளதாகவும் விவாகரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் பரப்புவது சாடிசம் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரீ என்ட்ரியாக அமைந்த பாகுபலி: ஒரு காலத்தில் ஐட்டம் பாடல்கள், கலக்கலான வேடங்கள் போன்றவற்றை ஏற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன், போல்டான கேரக்டர்களையும் இவர் ஏற்று நடித்திருந்தார். படையப்பா கேரக்டரில் முன்னதாக மீனாவைதான் கேஎஸ் ரவிக்கமார் பரிசீலித்ததாகவும் ஆனால் அவரது சாந்தமான முகம் இந்த கேரக்டருக்கு செட் ஆகாது என்பதால் ரம்யா கிருஷ்ணனை செலக்ட் செய்ததாகவும் இயக்குநர் பேட்டியொன்றில் கூறியிருந்தார். திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்துவந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ரீ என்ட்ரியாக பாகுபலி படம் அமைந்தது.


Click it and Unblock the Notifications











