Nayanthara: வயதானாலும் மெருகேறும் நயன்தாரா.. மகளிர் தினத்தில் இப்படி வாழ்த்திய விக்னேஷ் சிவன்!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆதர்ச தம்பதியாக கோலிவுட்டில் நடைபோட்டு வருகின்றனர். இருந்தாலும் இவர்கள் குறித்து அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதற்கெல்லாம் அதிகமான ரியாக்ட் செய்யாமல் இருவரும் மௌனம் காத்து வருகின்றனர். இருந்தாலும் எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாகவும் விக்னேஷ் சிவனை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இருவரும் இணைந்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், வாடகத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். தொடர்ந்து தான் சூட்டிங்கிற்கு சென்றாலும் அவர்களை சில நேரங்களில் நயன்தாரா அழைத்து செல்வதை பார்க்க முடிந்தது. மேலும் சென்னையிலேயே தன்னுடைய படங்களின் சூட்டிங் இருக்கும்படி நயன்தாரா பார்த்து வருவதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனிடையே விக்னேஷ் சிவன் LIC படத்தை இயக்கி வருகிறார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். வாடகை தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள இவர்கள் அடுத்தடுத்து தங்களின் படங்களின் பிஸியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் குறித்த அடுத்தடுத்த பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. சமீபத்தில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டாகிராமில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
விக்னேஷ் சிவன் -நுயன்தாரா குறித்த வதந்தி: இதனிடையே இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிலர் அன்ஃபாலோ ஆனதாகவும் அதில் விக்னேஷ் சிவனும் ஒருவர் என்றும் நயன்தாரா விளக்கம் அளித்து இருந்தார். மேலும் இருவரும் கடந்த ஆண்டு திருமண தினத்தின் போது எடுத்துக் கொண்ட நெருக்கமான வீடியோவை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாராவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா வைன் கிளாசின் பின்புலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை இணைத்துள்ளார்.

நயன்தாராவிற்கு மகளிர் தின வாழ்த்து: இந்த புகைப்படங்களுடன் தன்னுடைய மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் வயதாக வயதாக மெருகேறிக் கொண்டே இருக்கும் இரண்டு விஷயங்களில் ஒன்று காதல் என்றும் மற்றொன்று தன்னுடைய அழகிய பிடித்தமான தங்க பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகளிர் தின வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது நயன்தாரா மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் ஷாருக்கானுடன் நடித்திருந்த ஜவான் மற்றும் ஜெய்யுடன் இணைந்து நடித்த அன்னபூரணி படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன.

நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள்: இதில் ஷாருக்கானுடன் நடித்திருந்த ஜவான் படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்திருந்தது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட் என்ட்ரி கொடுத்திருந்தார். இதனிடையே ஜெய்யுடன் அவர் நடித்திருந்த அன்னபூரணி படமும் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெளியான இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எல்ஐசி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரதீப்பிற்கு கீர்த்தி ஷெட்டி ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











