சில பிரச்னைகள்.. நயன்தாராவுக்கு அப்போது அப்படி ஒரு வெறி.. டாப் சீக்ரெட் சொன்ன இயக்குநர்

சென்னை: நயன்தாரா தமிழில் பிஸியாக நடித்துவருகிறார். நானும் ரௌடிதான் படத்தின்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த அவர் சில வருடங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்துகொண்டார். வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரண்டு மகன்களுக்கு பெற்றார்கள் அவர்கள். சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாக நயன்தாராவை சுற்றி பிரச்னைகளும், சர்ச்சைகளும் முளைத்திருக்கின்றன. இந்தச் சூழலில் இயக்குநர் விஷ்ணுவர்தன் நயன் குறித்து பேசியிருக்கிறார்.

நயன்தாரா என்றாலே பிரச்னைகளும், சர்ச்சைகளும் என்று ஒரு காலம் இருந்தது. அந்த அளவுக்கு அவர் பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்பத்தை கவனிப்பதிலும், கரியரை கவனிப்பதிலும் பிஸியாக இருந்தார். சூழல் இப்படி இருக்க மீண்டும் அவரை சுற்றி பிரச்னைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அவரது பிறந்தநாளுக்கு வெளியான ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதியளிக்கவில்லை.

nayanthara vishnuvardhan

காட்டமான நயன்: அதேசமயம் ட்ரெய்லரில் மூன்று நொடிகள் வரக்கூடிய நானும் ரௌடிதான் காட்சிகளை வைத்தார் நயன். இதனால் பத்து கோடி ரூபாய் கேட்டு வக்கீல் நோட்டீஸை தனுஷ் அனுப்ப; காட்டமான நயன் தனுஷை விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து நயனுக்கு எதிராக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இது ஒருபக்கம் இருக்க தனுஷின் விவாகரத்தை மறைமுகமாக விமர்சித்து தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றையும் போட்டிருந்தார் அவர்.

விஷ்ணுவர்தன் பேட்டி: இந்நிலையில் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நயனை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "பில்லா படத்தை நாங்கள் ஆரம்பித்தபோது சில பிரச்னைகள் காரணமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் நயன்தாரா. அந்த சமயத்தில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் என்று எங்களுக்கு தெரிந்தது. உடனே அவரை சந்தித்து கதை சொன்னோம். அவரும் நடிக்க ஒத்துக்கொண்டார்.

வெறி இருந்தது: பில்லா படத்தில் நடித்தபோது தான் எப்படியாவது மிகப்பெரிய கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் வெறியாக இருந்தார். அவரைப் பொறுத்தவரை பல பிரச்னைகளை சந்தித்து சினிமாவிலிருந்து விலகுவார். ஆனால் மீண்டும் தரமான கம்பேக் கொடுப்பார். எனக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், நாங்கள் இருவரும் ஒரு விஷயத்திலிருந்து அவ்வளவு எளிதாக பின் வாங்கமாட்டோம்; விட்டும் கொடுக்கமாட்டோம். போராடிக்கொண்டே இருப்போம்.

ரியல் லைஃப் கேரக்டரும் ஒன்று: பில்லா படத்தின்போது தனது வெயிட்டையும் குறைத்திருந்தார். அந்த விஷயம் அந்த கேரக்டருக்கு மேலும் அழகை சேர்த்தது. முக்கியமாக அந்த கேரக்டர் படத்தில் பயங்கரமாக க்ளிக் ஆனதற்கு காரணம் அந்த கேரக்டரும், அவரது உண்மையான கேரக்டரும் ஒன்றுதான். பில்லா படத்தை முடித்துவிட்டு ஆரம்பம் படத்தை ஆரம்பித்தேன். அப்போதும் அவரை நடிக்க வைத்தேன். அந்த கேரக்டரும் அவ்வளவு போல்டான, ஸ்ட்ராங்கான கேரக்டர். அதற்கும் அவர் பொருத்தமாக இருந்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X