உன்னைத் தான் தேடிக்கிட்டிருந்தோம் ராசாத்தி: ரித்திகாவை மெச்சும் இயக்குனர்கள்

By Siva

சென்னை: ரித்திகா செய்த ஒரு செயலால் அவரை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் மாதவனின் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையானார். குத்துச் சண்டை வீராங்கனையாக இருந்தாலும் முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திவிட்டார்.

இறுதிச்சுற்று படம் இந்தியில் சாலா கடூஸ் என்ற பெயரில் வெளியானது.

இந்தி

இந்தி

சாலா கடூஸ் படத்தை பார்த்தவர்கள் ரித்திகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். ஆனால் அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.

தமிழ்

தமிழ்

மும்பையை சேர்ந்த ரித்திகாவுக்கு பாலிவுட்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து நடித்துள்ள சிவலிங்கா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

ஸ்டைலிஷ் வில்லனாக அசத்தி வரும் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ரித்திகா. பந்தா செய்யாமல் அமைதியாக இருக்கும் ரித்திகாவை இயக்குனர்களுக்கு பிடித்துள்ளது.

கதை

கதை

சில நடிகைகள் கதை கேட்க இயக்குனர்களை மும்பைக்கு வரச் சொல்கிறார்கள். ஆனால் ரித்திகாவோ தனது தாயுடன் மும்பையில் இருந்து சென்னை வந்து கதை கேட்டுள்ளார். ரித்திகாவின் இந்த செயல் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X