ஒரே ஹோட்டல்.. ஒன்றாக வெளியே வந்த நாகினி நடிகையும் கங்குவா ஹீரோயினும்.. தீயாக பரவும் வீடியோ!
மும்பை: சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்துள்ள நடிகை திஷா பதானியும் நாகினி சீரியல் நடிகை மெளனி ராயும் ஒரே ஹோட்டலில் இருந்து வெளியே வரும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பாலிவுட் நடிகை திஷா பதானி ஜான்வி கபூரை போலவே தென்னிந்திய படங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனி பயோபிக்கில் நடித்த படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக திஷா பதானி நடித்திருப்பார்.

ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படம் வரை நடித்து சர்வதேச நடிகையாக மாறிய திஷா பதானி இந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி கங்குவா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களை குளிர்விக்க காத்திருக்கிறார்.
அனலை கிளப்பும் திஷா பதானி: இந்திய நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இன்ஸ்டாகிராமில் 61.5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார் நடிகை திஷா பதானி. மலங் படத்தில் பீச்சில் இருந்து டூ பீஸ் உடையில் இவர் எழுந்து வருவதை பார்த்ததில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது அழகிற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். அடிக்கடி உள்ளாடையுடன் மட்டுமே போஸ் கொடுத்து 6 கோடி ரசிகர்களை தனது சொந்தமாக்கியிருக்கிறார் திஷா பதானி.

கங்குவா நாயகி: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பெரிய போட்டி எதுவுமே இல்லாமல் வெளியாக காத்திருக்கிறது. கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கல்கி படத்தில் இவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் அந்த படத்தில் அதிகம் இல்லாத நிலையில், கங்குவா படத்தில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது படம் வந்தால் தான் தெரியவரும்.
ஒரே ஹோட்டலில் இருந்து: மெளனி ராய் மற்றும் திஷா பதானி நெருங்கிய தோழிகளாக சமீப காலமாக மாறியுள்ளனர். முன்னதாக டைகர் ஷெராஃபின் தங்கை கிருஷ்ணா ஷெராஃப் உடன் அதிகம் நேரத்தை செலவு செய்து வந்த திஷா பதானி தற்போது மெளனி ராயுடனே சுற்றி வருகிறார். இருவரும் சேர்ந்து கோவா உள்ளிட்ட இடங்களுக்கு டூர் அடித்து வந்தனர். இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இருவரும் வெளியே வந்தபோது புகைப்படக் கலைஞர்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. திருமணத்துக்குப் பிறகு மெளனி ராய் கணவருடன் சுற்றுவதை விட திஷா பதானியுடன் சுற்றுவது தான் அதிகம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











