Disha Patani: கங்குவா, கல்கி நாயகிக்கு எத்தனை வயசு ஆகுது தெரியுமா?.. சொத்து மட்டும் இத்தனை கோடியா?
மும்பை: பிரபாஸின் கல்கி 2898 ஏடி, சூர்யாவின் கங்குவா படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை திஷா பதானி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை தனது பாய் ஃபிரெண்டுடன் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் நிலையில், திஷா பதானி, கியாரா அத்வானி, ஜான்வி கபூர் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடித்து வருகின்றனர்.

திஷா பதானியின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை பார்த்து சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி உள்ள நிலையில், இளம் வயதில் பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ள திஷா பதானியின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
திஷா பதானி பர்த்டே: 1992, ஜூலை 13ம் தேதி உத்தர பிரதேசத்தில் பிறந்தவர் திஷா பதானி. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தெலுங்கில் அதற்கு முன்னதாக அவர் நடித்த லோஃபர் திரைப்படம் வெளியானது. இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வரும் திஷா பதானிக்கு கங்குவா மற்றும் கல்கி படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கங்குவா ஹீரோயின்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திஷா பதானி நடித்த பழைய படங்களின் காட்சிகளை எடிட் செய்து பர்த்டே வீடியோ வெளியிட்டுள்ளனர். இதற்கு கங்குவா படத்தில் இருந்து அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கலாம் என சூர்யா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரபாஸ் படம்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், ஷோபனா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள கல்கி 2898 ஏடி படத்திலும் திஷா பதானி நடித்துள்ளார். வரும் ஜூன் 27ம் தேதி கல்கி திரைப்படம் வெளியாகிறது. சமீபத்தில், வெளியான டிரெய்லரில் திஷா பதானியின் அட்டகாசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
சொத்து மதிப்பு: மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கர் மும்பை பகுதியில் கடலை பார்த்தபடி 5 கோடி மதிப்பிலான பங்களாவை இவர் சொந்தமாக வைத்திருக்கிறார். படங்களில் நடிக்க அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் திஷா பதானி, விளம்பரங்களில் நடிக்க 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறாராம். 32 வயதாகும் திஷா பதானி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஜாக்கி சான் படம் வரை நடித்து சேர்த்து வைத்த சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு 75 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











