தோனி பட நடிகையின் அக்வாஉமேன் அவதாரம்... அல்லாடும் ரசிகர்கள்!

சென்னை : நடித்த இரண்டாவது திரைப்படத்திலேயே இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை டிஷா பட்டாணி அதில் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்திருப்பார்.

தோனி: தி அண்ட் தோனி ஸ்டோரி திரைப்படத்திற்கு பிறகு இப்போது சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரைப்படமான ராதேவில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

இந்தநிலையில் பட்டாணிக்கு சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போக பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இப்பொழுது அக்வாமேன் கெட்டப்பில் பிகினி உடையில் நின்று கொண்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

வசூலை குவித்து

வசூலை குவித்து

நடன இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வரும் நடிகர் பிரபுதேவா இப்போது பாலிவுட்டில் இயக்குனராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக சல்மான்கானுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வசூலை குவித்து வரும் இவர் இப்பொழுது தபாங் 3 திரைப்படத்திற்கு பிறகு ராதே படத்தை இயக்கி வருகிறார்.

பட்டையை கிளப்பி

பட்டையை கிளப்பி

ஆக்ஷன் காட்சிகள் என்றால் அல்வா போல சாப்பிடும் சல்மான்கான் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இதுவரை நடித்திராத அளவிற்கு பட்டையை கிளப்பி இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இவருக்கு ஜோடியாக நடிகை டிஷா பட்டாணி நடித்து வருகிறார்.

சூப்பர் ஹிட் திரைப்படங்களில்

சூப்பர் ஹிட் திரைப்படங்களில்

தோனி: தி அண்ட் தோனி ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் கால்தடத்தை இந்தியில் ஆழமாகப் பதித்த டிஷா பட்டாணி அதைத்தொடர்ந்து பரத், பாகி 2, என சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.

அமைதியான பெண்ணாக

அமைதியான பெண்ணாக

பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் தோனி திரைப்படத்தில் அனைவரும் ரசிக்கும் அமைதியான பெண்ணாக நடித்திருந்த இவர் இப்பொழுது இணையத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

இந்திய சினிமாவின் அக்வாஉமன்

இந்திய சினிமாவின் அக்வாஉமன்

கவர்ச்சியால் இணைய தளத்தை தொடர்ந்து தவிக்கவிட்டு வரும் இவர் இப்பொழுது அக்வாஉமேன் லுக்கில் கையில் கம்புடன் நடுக்கடலில் பிகினி உடையில் நின்று கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு வரும் நிலையில் சிலர் நீங்கள் தான் இந்திய சினிமாவின் அக்வாஉமன் என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X