இந்த நேரத்துல இப்படி உள்ளாடை விளம்பரம் தேவையா.. திஷா படானியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
மும்பை: மேலாடைகள் இன்றி வெறும் உள்ளாடையுடன் பயங்கர செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள திஷா படானியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், இப்படியொரு கவர்ச்சி போஸ்ட் தேவையா என நேரடியாகவே திஷா படானியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே ஷேம் ஆன் பாலிவுட் ஹாஷ்டேக், பாய்காட் பாலிவுட் போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டான நிலையில், தற்போது திஷா படானியின் பக்கம் அந்த கோவம் திரும்பியுள்ளது.
உள்ளாடை விளம்பரம்
பாலிவுட்டின் நட்சத்திரங்கள் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக வாய் திறக்காமல் இருந்து வரும் நிலையில், சில பாலிவுட் பிரபலங்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை திஷா படானி Calvin Klein உள்ளாடையுடன் படு செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
நினைத்தது வேறு நடந்தது வேறு
தனது ஹாட் புகைப்படத்தை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் ஜொள்ளு விடுவார்கள் என நினைத்து திஷா படானி இந்த புகைப்படத்தை பதிவிட்டார். ஆனால், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் சூடு பிடித்துள்ளதால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மாறாக ரசிகர்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
யார் செக்ஸி
உலகளவில் மாடலிங்கில் கலக்கி வரும் கைலி ஜென்னரா அல்லது இந்திய அழகி திஷா படானியா யார் மிகவும் ஹாட்டாக இருக்கிறார் என இந்த ரசிகர் இந்த ரணகளத்திலும் போட்டி வைத்து விளையாடுகிறார்.
ஆபாசமான கமெண்ட்
திஷா படானி பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படத்தை தனது மொபைல் ஸ்க்ரீனில் வைத்துள்ள இந்த நெட்டிசன், யாராவது மெனு பட்டனை திறக்க முயற்சிக்கிறீர்களா என ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளார்.
இது திறமை கிடையாது
எப்படி பார்த்தாலும், இப்படி உடலை காட்டி சம்பாதிப்பது திறமை கிடையாது. இளைஞர்கள் மாறி விட்டனர். நீங்களும் மாறுங்கள் என இந்த நெட்டிசன் திஷா படானியின் ஹாட் புகைப்படத்திற்கு குட்டு வைத்துள்ளார்.
இந்தாங்க டவல்
குளித்து விட்டு ஆடை அணியாமல் அப்படியே வந்துட்டீங்க, இந்தாங்க டவல் கட்டிக்கோங்க என இந்த ரசிகர் போட்டோஷாப் செய்து திஷா படானியை கலாய்த்துள்ளார்.
இந்த நேரத்துல இது தேவையா
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து மாணவர்கள் போராடி வரும் நேரத்தில் இது தேவையா என்ற ரீதியில் இந்த நெட்டிசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











