Disha Patani: கங்குவா ஹீரோயின் இவ்ளோ கனிவானவங்களா.. சாலையோர குழந்தைகளுடன் எவ்ளோ க்யூட் வீடியோ!
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவார் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி.
இந்தி நடிகையான திஷா பதானி சமீபத்தில், சாலையோர குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தோனி படத்தில் அறிமுகம்: எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியா நடித்திருந்தார். அந்த படத்தில் அவரை காதலிக்கும் காதலியாக பாலிவுட்டில் அறிமுகமானார் திஷா பதானி.
நடிகர் ஜாக்கிசான் நடித்த குங்ஃபூ யோகா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ள திஷா பதானி இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய தாராள தரிசனத்தை காட்டி வரும் நிலையில், திஷா பதானி ரியல் லைஃபில் ஓர் ஆட்டிட்யூட் பர்சன் என ரசிகர்கள் நினைத்து வந்தனர்.

சாலையோர குழந்தைகளுடன்: ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லைங்க என்பதுபோல சாதாரண ரசிகர்களுடன் அலவளாவிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. காரில் இருந்து திஷா பதானி இறங்கியதை பார்த்த குழந்தைகள் நடிகை திஷா பதானியை தொட்டுப் பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அந்த குழந்தைகளுடன் அன்பாக போட்டோக்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து காரில் ஏறி நடிகை திஷா பதானி சென்ற காட்சிகள் தான் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன.
கங்குவா ஹீரோயின்: பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃபை திஷா பதானி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அலெக்சாண்டர் எனும் மாடலுடன் நடிகை டேட்டிங் செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன.
சூர்யாவின் கங்குவா படத்தில் பீரியட் போர்ஷனில் திஷா பதானி நடித்துள்ளாரா அல்லது மாடர்ன் போர்ஷனில் நடித்துள்ளாரா உள்ளிட்ட கேள்விகளும் எழுந்துள்ளன. இதுவரை திஷா பதானியின் கங்குவா பட லுக் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











