பிரபல நடிகையின் காலை உடைத்த பிரபு தேவா.. நம்ம மாஸ்டர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரனாச்சே!
பிரபு தேவா கொடுத்த நடன பயிற்சியால் முட்டிக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக நடிகை திஷா பதானி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: பிரபு தேவா கொடுத்த நடன பயிற்சியால் நடிகை திஷா பதானிக்கு முட்டிக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பாரத். கேத்ரினா கைஃப், திஷா பதானி, தபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் சல்மானுக்கு பெரிய தோல்வியை ஏற்படுத்திவிட்டது.
இதனால் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பதாக இருந்த இன்ஷால்லா படம் கைவிடப்பட்டது. இதையடுத்து தனது ராசியான இயக்குனர் பிரபு தேவாவுக்கு அடுத்தப்பட வாய்ப்பை வழங்கியிருக்கிறார் சல்மான்.

ராதே : தி மோஸ்ட் வாண்டட் பாய்
ராதே : தி மோஸ்ட் வாண்டட் பாய் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. திஷா பதானி இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார். பரத் வில்லனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தபங் 3 ரிலீஸ்
இதற்கிடையே பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் நடித்துள்ள தபங் 3 படம் அடுத்த மாதம் 20ம் தேதி ரிலீசாகிறது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் புரொமோஷன் வேலைகளில் சல்மான் பிஸியாக இருக்கிறார்.

நடனப் பயிற்சி
இதனால் ராதே படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைக்கும் பணியில் பிரபு தேவா ஈடுபட்டுள்ளார். அதில் திஷா பதானி உள்ளிட்ட சக நடிகர், நடிகையர் ஈடுபட்டு வருகிறார்கள்.

கால்முட்டியில் காயம்
இந்நிலையில், திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரபு தேவாவின் நடன அசைவுகளால் தனது கால்முட்டி காயம் அடைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலாய்க்கும் நெட்டிசன்கள்
இதை பார்த்த நெட்டிசன்கள், 'பின்ன பிரவு தேவா நடனம் என்றால் சும்மாவா' என திஷாவை கலாய்த்து வருகின்றனர். உண்மை தானே.. பின்ன பிரபு தேவா நடனம் என்றால் சும்மவா! பொதுவா டான்ஸ் ஆடி கால் உடைஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க. இப்போ அது திஷா பதானி உண்மையாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











