பிரபாஸை காதலிக்கிறாரா திஷா பதானி?.. திடீரென முளைத்த டாட்டூவால் இப்படி மாட்டிக்கிட்டாரே!
ஹைதராபாத்: பாகுபலி படத்தின் போது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமணமே செய்துக் கொள்ளப் போவதாக கிசுகிசுக்கள் ஹெவியாக கிளம்பின. இதுவரை இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகை திஷா பதானி பிரபாஸை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. அதற்கு காரணம் ஒரு முக்கிய டாட்டூ தான்.
பிரபுதேவாவை காதலித்த போது நயன்தாரா அவரது பெயரை டாட்டூவாக குத்தியிருந்தார். அதன் பின்னர் அதை பாசிட்டிவிட்டி என மாற்றிக் கொண்டார். இந்நிலையில், திஷா பதானி போட்டிருக்கும் டாட்டூ பிரபாஸ் பெயரைத்தான் குறிப்பதாக கூறுகின்றனர்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் சின்ன போர்ஷன் என்றாலும் பிரபாஸுக்காக நடித்துக் கொடுத்திருந்தார் திஷா பதானி. இருவருக்கும் இடையே வரும் ரொமான்டிக் பாடல் இத்தாலியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டா டக்கரா: சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபாஸ், திஷா பதானி இருவரும் காசி நகரில் இருந்து வேலைக்காக காம்ப்ளக்ஸ் இடத்துக்கு செல்லும் போது, வேலை செய்யவா வந்தோம். நகரத்தை சுற்றிப் பார்க்கலாம் என இருவரும் சுற்ற கிளம்பி ஒரு நிகழ்ச்சியில் ஷாம்பைன் எல்லாம் குடித்து கும்மாளம் போட்டு நடனம் ஆடும் டா டக்கரா பாடல் வீடியோவை கல்கி 2898 ஏடி படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அந்த ஒரு பாடல் மற்றும் இன்னும் ஒரு சீனில் மட்டுமே திஷா பதானி நடித்திருப்பார்.

பிரபாஸை காதலிக்கிறாரா திஷா பதானி: பிரபாஸுடன் வெளிநாட்டில் திஷா பதானி டேட்டிங் செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், திஷா பதானி கையில் தற்போது புதிதாக உள்ள டாட்டூ பிரபாஸை அவர் காதலிப்பதை உறுதி செய்கிறது என பாலிவுட் முதல் டோலிவுட் வரை பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
திஷா டாட்டூ: கல்கி திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ராக்ஸி எனும் கதாபாத்திரத்தில் வாம்மா மின்னல் என்பது போல வந்து செல்வார். பிரபாஸுடன் ஒரு பாடலில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடற்கரையில் திடீரென ஆடையை அவர் கழட்டியதும் பிகினி தரிசனத்தை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறார் என ஒரு செகண்ட் அனைவரும் பயந்து விட்டனர். ஆனால், நாக் அஸ்வின் கொஞ்சம் டீசன்ட்டான நீச்சல் உடையை கொடுத்து காப்பாற்றி விட்டார். இந்நிலையில், திஷா பதானி கையில் PD - என பிரபாஸ் மற்றும் திஷாவை குறிக்கும் டாட்டூ புதிதாக இடம்பெற்றுள்ளது தான் இந்த காதல் கிசுகிசுவுக்கு காரணம் ஆகியிருக்கிறது.

அப்போ அலெக்ஸாண்டர்?: டைகர் ஷெராஃபை திஷா பதானி காதலிப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. அதன் பின்னர் மாடல் நடிகர் அலெக்ஸாண்டர் என்பவருடன் திஷா பதானி டேட்டிங் சென்ற நிலையில், அவரைத்தான் காதலித்து வருவதாக கூறினர். அலெக்ஸாண்டரும் திஷா பதானியின் உருவத்தையே தனது கையில் டாட்டூவாக குத்தியிருந்தார். இந்நிலையில், அவருக்கும் அல்வா கொடுத்து விட்டு பிரபாஸை காதலித்து வருகிறாரா திஷா பதானி என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
கங்குவா ஹீரோயின்: கல்கி 2898 ஏடி படத்தில் வந்து சென்றதை போல கங்குவா படத்திலும் திஷா பதானி சின்ன ரோலில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் சிறுத்தை சிவா நாக் அஸ்வின் போல ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்றும் திஷா பதானியின் கிளாமர் ட்ரீட்டை நிச்சயம் வைத்திருப்பார் என எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











