பிக் பாஸ் பிரபலத்துடன் கள்ளத்தொடர்பு: நடிகரை பிரிந்த பிரபல நடிகை
மும்பை: தொலைக்காட்சி நடிகர் பார்த் சமதன் ஒரு நடிகருடன் தொடர்பில் இருந்ததால் நடிகை திஷா பதானி அவரை பிரிந்து சென்றுள்ளார்.
கூல் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அதன் பிறகு அவர் டைகர் ஷ்ராஃபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது சல்மான் கானுடன் சேர்ந்து பாரத் படத்தில் நடித்துள்ளார் திஷா.
இந்நிலையில் திஷா பதானியின் முந்தைய காதல் குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகிறது.

பார்த் சமதன்
திஷா பாலிவுட்டில் பிரபலம் ஆகும் முன்பு தொலைக்காட்சி நடிகர் பார்த் சமதனை காதலித்துள்ளார். சுமார் ஓராண்டு காலம் காதலித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

திஷா
பார்த் சமதன் திஷாவை காதலித்த போதே பிக் பாஸ் பிரபலமான விகாஸ் குப்தாவையும் காதலித்துள்ளார். விகாஸும், பார்த்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை திஷா பார்த்துள்ளார். பார்த் தன்னை ஏமாற்றியது குறித்து அறிந்ததால் அவர் பிரிந்து சென்றுவிட்டாராம்.

சாட்சி
விகாஸ் குப்தாவும், பார்த் சமதனும் காதலிப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூரே கடந்த 2016ம் ஆண்டில் தெரிவித்தார். விகாஸ் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக பார்த் புகார் தெரிவித்தாலும் அவர்களுக்கு இடையே காதல் உள்ளது. இருவரும் சேர்ந்து பாங்காக் சென்றனர். அங்கு பார்த் விகாஸிடம் தனது காதலை தெரிவித்த வீடியோக்களை பார்த்தேன் என்றார் ஏக்தா.

டைகர்
திஷா தற்போது டைகர் ஷ்ராஃபை காதலித்து வருகிறார். திஷாவும், டைகரும் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இந்த காதலுக்கு டைகர் வீட்டில் அதிலும் குறிப்பாக அவரின் அம்மா எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











