ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பதானி ஒப்பந்தமாகியுள்ளார்.

மும்பை: தபங் 3 படத்தில் நடித்து வரும் சல்மான் கான், பிக்பாஸின் 13வது சீசனில் பிசியாகி உள்ளார். இந்நிலையில், பிரபுதேவா இயக்கவுள்ள ராதே படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 4ம் தேதி துவங்கவுள்ளது.

தற்போது அந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பதானி கமீட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

2020ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள 'ராதே: இந்தியாஸ் மோஸ் வாண்டட் காப்' திரைப்படம், 2017ம் ஆண்டு கொரிய மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற 'தி அவுட்லாஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Disha Patani pairs with Salman Khan in Radhe movie

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படும் பிரபுதேவா இயக்கத்தில் தபங் 3ம் பாகத்தில் சல்மான் கான் தற்போது நடித்து வருகிறார். வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி தபங் 3 படம் வெளியாகவுள்ள நிலையில், சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி மீண்டும் ராதே படத்திற்காக இணைகிறது.

வரும் நவம்பர் 4ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இந்த படத்தில் எம்.எஸ். தோனி, குங்ஃபூ யோகா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் படக்குழு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானுடன் திஷா பதானி ஜோடி சேர்வதால், திஷா பதானியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஷாருக்கான் மற்றும் ஆமீர் கானின் பெரிய படங்கள் தற்போது ரிலீஸ் ஆகாத நிலையில், பாலிவுட்டில் மீண்டும் தனது கொடியை சல்மான் கான் நாட்ட தொடர்ந்து தயாராகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X