ஷாருக்கான் உடன் அப்படி ஒரு டேட்டிங் போகணுமாம்.. திஷா படானியின் இந்த ஆசை நிறைவேறுமா?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் காஃபி டேட்டிங் செல்ல நடிகை திஷா படானி ஆர்வம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் இளம் செக்ஸி குயினாக வலம் வரும் நடிகை திஷா படானி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
வரும் பிப்ரவரி 7ம் தேதி ஆதித்யா ராய் கபூருடன் இவர் இணைந்து நடித்துள்ள மலங் திரைப்படம் திரைக்கு வருகிறது.

பயங்கர புரமோஷன்
ஆஷிக் 2 படத்தை இயக்கிய மோகித் சூரி இயக்கத்தில் உருவாகி உள்ள மலங் திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தில் ஆதித்யா ராய் கபூருடன் ஜோடி போட்டு நடித்துள்ள திஷா படானி, அவருடன் இணைந்து படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

டேட்டிங் செல்ல ஆசை
மலங் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின் போது, நடிகை திஷா படானி இடம் பாலிவுட்டில் எந்த நடிகருடன் காஃபி டேட் செய்ய விருப்பம் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் காஃபி டேட் செல்ல ஆசை என திஷா படானி தெரிவித்துள்ளார்.

பார்த்ததே இல்லை
பாலிவுட்டின் ஹாட் இளம் நடிகையாக வலம் வரும் திஷா படானி, இதுவரை ஷாருக்கானை நேரில் பார்த்தது கூட இல்லை என்றும் அவருடன் தான் டேட்டிங் செல்ல வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். எம்.எஸ். தோனி பயோபிக் மூலமாக அறிமுகமாகி 6 படங்களுக்கு மேல் நடித்துள்ள திஷா படானி இப்படி கூறியது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ரூமர் காதல்
பாகி படத்தில் டைகர் ஷெராஃபுக்கு ஜோடியாக திஷா படானி நடித்திருந்தார். அந்த படத்தில் அவருடன் மிகவும் நெருக்கமாக திஷா படானி நடித்திருந்த நிலையில், டைகர் ஷெராஃபுக்கும் திஷா படானிக்கும் காதல் என பாலிவுட்டில் வதந்தி பரவி வருகிறது. சமீபத்தில் மலங் படத்தின் ஹாட் லிப் லாக் போஸ்டரை பார்த்த பாலிவுட் ரசிகர்கள், டைகர் ஷெராஃபை வைத்து மீம் போட்டு கலாய்த்தனர்.

ஜாக்கி சானுடன்
பாலிவுட்டில் என்ட்ரியாகி இரண்டு படங்கள் நடித்த நிலையிலேயே, நடிகை திஷா படானி, ஜாக்கி சான் நடிப்பில் வெளியான குங்ஃபூ யோகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். குங்ஃபூ யோகா படத்தில் தனுஷின் அநேகன் படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் மற்றும் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்டும் நடித்திருந்தனர்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை
கெல்வின் கிளெய்ன் உள்ளாடையை மட்டும் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்த திஷா படானி, மலங் படத்தில் டூபீஸ், நீருக்கடியில் லிப் லாக், ஆதித்யா ராய் கபூருடன் நெருங்கிய ஹாட் காட்சிகள் என டீசரிலேயே ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து போட்டுள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ள மலங் படத்தில் கவர்ச்சி மற்றும் காதல் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











