twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேங்கப்பா.. ஆகாசத்துல பறந்து அடிக்கிறதுன்னா இதுதானா? திஷா பதானியின் மிரள வைக்கும் ஃபிளையிங் கிக்!

    |

    மும்பை: பாலிவுட்டின் பிகினி குயின் திஷா பதானியின் ஸ்டன்ட் வீடியோ ஒன்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

    காதலரும் நடிகருமான டைகர் ஷெராஃப்புக்கே டஃப் கொடுக்கும் விதமாக இப்படியொரு ஹை ஜம்ப் கிக் ஸ்டன்ட்டை செய்து அசத்தி உள்ளார் திஷா பதானி.

    அதிகளவிலான எடையை தூக்கி வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களை ஷேர் செய்து வந்த திஷா பதானி தற்போது அதுக்கும் மேல எஃபோர்ட் போட்டு அமர்க்களப்படுத்தும் வீடியோவுக்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

    பிகினி குயின்

    பிகினி குயின்

    பாலிவுட்டின் பிகினி குயின் என்றே அழைக்கப்பட்டு வருகிறார் நடிகை திஷா பதானி. லோஃபர் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 48.6 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ள திஷா பதானி ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க அடுக்கி ரசிகர்களை அலற வைத்துள்ளார்.

    டைகர் ஷெராஃப்புடன் காதல்

    டைகர் ஷெராஃப்புடன் காதல்

    நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகனும் ஹீரோவுமான டைகர் ஷெராஃப்பை திஷா பதானி காதலித்து வருவதாக பாலிவுட்டில் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களும், இருவரது திருமணம் குறித்து ஜாக்கி ஷெராஃப் பேசியதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின.

    வொர்க்கவுட் ஃப்ரீக்

    வொர்க்கவுட் ஃப்ரீக்

    செம ஸ்லிம்மாக பென்சில் போல இருக்கும் திஷா பதானி வெறித்தனமான வொர்க்கவுட் ஃப்ரீக். ஹெவி வெயிட்டுகளை லிஃப்டிங் செய்வது, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் என எப்போதுமே ஜிம் கேர்ளாகவே இருப்பதையும் பிகினி புகைப்படங்களுக்கு இடையே இடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் திஷா பதானி.

    ஃபிளையிங் கிக்

    ஃபிளையிங் கிக்

    மலங் படத்தில் அவர் அடித்த லிப் கிஸ் காட்சிகள் எந்தளவுக்கு டிரெண்டானதோ அதை விட தற்போது அவர் வெளியிட்டுள்ள ஃபிளையிங் கிக் வீடியோ இணையத்தை அதிர வைத்து வருகிறது. செம ஜம்ப் பண்ணி கிக் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார் திஷா பதானி.

    வியந்து போன ரசிகர்கள்

    என்னம்மா இப்படி ஆகாசத்துல பறந்து அடிக்கிறீங்களே என 3.6 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வெறும் 5 நேரத்தில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் இந்த ஸ்டன்ட் வீடியோவுக்கு அள்ளி குவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் திஷா பதானியின் இந்த அட்டகாசமான திறமையை பாராட்டி வருகின்றனர்.

    காதலர் போட்ட கமெண்ட்

    காதலர் போட்ட கமெண்ட்

    திஷா பதானியின் இந்த செம கிக் வீடியோவை பார்த்து அசந்து போன நடிகர் டைகர் ஷெராஃப்.. அப்படியே வாய் பிளந்து நானும் இவ்வளவு நேரம் ஏரில் பறக்க ஆசைப்படுகிறேன் என கமெண்ட் அடித்துள்ளார். அவரது கமெண்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்து காதலி வீடியோ போட்டதும் ஆஜராகி விட்டீங்களே என கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Bollywood young actress Disha Patani’s flying kick video gives shocking surprise to fans and his rumoured boy friend Tiger Shroff.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X