இதுதான் லாக்டவுன் காஸ்ட்யூமா? கொரோனா டொப்புன்னு செத்துரும் போலயே.. ஹீரோயினை கலாய்க்கும் பேன்ஸ்!

By

சென்னை: பிரபல ஹீரோயின் அணிந்துள்ள காஸ்ட்யூமை, ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

Recommended Video

163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

தெலுங்கில், புரிஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் திஷா படானி.

தொடர்ந்து இந்திக்குச் சென்ற அவர், எம்.எஸ்.தோனி, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத் உட்பட சில படங்களில் நடித்தார்.

லிப் லாக் முத்தம்

லிப் லாக் முத்தம்

ஆதித்யா ராய் கபூருடன் மலங் , பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும், ராதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலங் படத்தில் இவர் கொடுத்த லிப் லாக் முத்தம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீரோ ஆதித்யா ராய் கபூர் முதுகில் ஏறி அமர்ந்து வித்தியாசமாகக் கொடுத்த அந்த லிப் லாக் போஸ்டர் வைரலானது.

View this post on Instagram

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

ரசிகர் கூட்டம்

அவர், தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதைப் பார்ப்பதற்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவரது ஸ்டைலான உடைகளும் பரபரப்பாகப் பேசப்படும். ஒர்க் அவுட் போட்டோக்களையும் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் தனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்று அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

View this post on Instagram

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

கிளாமர் போட்டோ

புகைப்படங்களுக்கு ஹாட்டாக போஸ் கொடுக்க வெட்கப்படுவேன் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் திஷா, தனது கிளாமர் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

குணப்படுத்திடலாம்

குணப்படுத்திடலாம்

'ஓ இதுதான் லாக்டவுன் காஷ்ட்யூமா? எக்குத்தப்பால்ல இருக்கு' என்று ஒரு ரசிகர் கலாய்த்துள்ளார். வேறு சிலர், நீங்க சும்மாவே அழகு. இந்த லாக்டவுன்ல இன்னும் அழகாயிட்டீங்க என்று கூறியுள்ளனர். ஒரு நெட்டிசன், உங்களோட ஒரு லுக்ல கொரோனாவை கொன்னுடலாம். இன்னொரு லுக்ல கொரோனா தொற்றைக் குணப்படுத்திடலாம்' என்று கூறியுள்ளார்.

வெள்ளை மயில்

வெள்ளை மயில்

இன்னும் சிலர், 'இது ஒரு டிரெஸ்? வீட்டுல இருக்கும்போது கூட, நல்ல டிரெஸ் போட மாட்டீங்களா? என்று திட்டியுள்ளார். இன்னும் சில ரசிகர்கள் அவரது உடையை குறை கூறியுள்ளனர். பெரும்பாலான நெட்டிசன்கள், நீங்க வெள்ளை மயில் என்கிற ரீதியில் அவரது அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர். திஷாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X