ஹீரோ ரேஞ்சுக்கு பறந்து பறந்து உதைக்கும் தோனி பட நடிகை.. வைரலாகும் வீடியோ!
மும்பை : கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுதும் பிரபலமானவர் நடிகை டிஷா பதானி.
பாலிவுட்டில் கவனிக்கக்கூடிய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் இவர் இப்போது சல்மான்கானுடன் இணைந்து ராதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது அடுத்த திரைப்படத்திற்காக ஆக்சன் பயிற்சியில் இறங்கியுள்ள நடிகை டிஷா பதானி இப்பொழுது ஹீரோக்களைப் போல ஆக்ஷனில் பறந்து பறந்து உதைக்கும் பிராக்டீஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

ராதே
நடித்த சில திரைப்படங்களிலேயே இந்தி சினிமாவில் அனைவரும் கொண்டாடும் அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்றுள்ள நடிகை டிஷா பதானி பாரத் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சல்மான்கானுடன் இணைந்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

நேர்த்தியான நடிப்பு
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவான எம் எஸ் தோனி : தி அண்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி பாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப் பலமாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று இப்பொழுது இந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அடிக்கடி டேட்டிங்
பாலிவுட் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர் டைகர் ஷெராப் உடன் இணைந்து பாகி 2ல் நடித்து வந்த இருவரும் காதலில் விழுந்ததாகவும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் சில கிசுகிசுக்கள் இந்தி படத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கையில் பாகி 3ல் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் பாகி 3 தமிழில் வெளியான வேட்டை திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஜோடி
பிரபு தேவா, சல்மான்கான் இணையும் திரைப்படங்கள் என்றாலே வசூல் வேட்டை செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வரும் நிலையில் வாண்டட், தபாங் 3 ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ராதே மிகப்பெரிய பொருட்செலவில் தூள் கிளப்பும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வர சல்மான்கானுடன் மீண்டும் ஜோடி போட்டுள்ளார் டிஷா.

பறந்து பறந்து பாக்ஸிங்
கவர்ச்சியிலும் நடிப்பிலும் கலக்கி வரும் டிஷா இப்பொழுது ஆக்சன் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் அதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டு வரும் இவர், இப்பொழுது பாக்ஸிங் பேக்கை பறந்து பறந்து எட்டி உதைக்கும் பிராக்டீஸ் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டதை அடுத்து இப்போது வைரல் ஆகி வர, திரைப்படங்களிலும் இவரது ஆக்ஷனை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











